குடியுரிமை சட்டம் பற்றி கேள்வி கேட்ட செய்தியாளர்.. சமாளித்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா?
குடியுரிமை சட்டம் குறித்து நான் சினிமா மேடையில் பேச மாட்டேன், அதை பற்றி வேறு மேடையில் பேசுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: குடியுரிமை சட்டம் குறித்து நான் சினிமா மேடையில் பேச மாட்டேன், அதை பற்றி வேறு மேடையில் பேசுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க கலவரமும் போராட்டமும் வெடித்து இருக்கிறது. டெல்லியில் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்
இந்த நிலையில் நேற்று தர்பார் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்திடம் குடியுரிமை சட்டம் குறித்தும், அதற்கு எதிரான போராட்டம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

சினிமா மட்டும்
இதற்கு பதில் அளித்த நடிகர் ரஜினிகாந்த் , இது சினிமா விழா, இங்கு டிரைலர் வெளியிட வந்து இருக்கிறோம். அதை பற்றி பேசலாம். சினிமா அரசியல் இரண்டையும் ஒன்றாக சேர்க்க வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

மீண்டும் கேள்வி
அதற்கு தொடர்ந்து கேள்வி எழுப்பிய அந்த செய்தியாளர், உங்களுடைய குரல் முக்கியமானது, அழுத்தமானது. நீங்கள் பேசுவது மிக முக்கியமானது. அதனால்தான் கேட்கிறேன். இந்த சட்டம் குறித்தும் போராட்டம் குறித்தும் உங்களுடைய கருத்து என்ன? என்று மீண்டும் கேள்வி எழுப்பினார்.
|
என்ன கருத்து
இதற்கு மீண்டும் பதில் சொன்ன ரஜினி, எனக்கு இது தொடர்பாக கருத்து உள்ளது. ஆனால் அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். அதற்கு என்று ஒரு மேடை இருக்கிறது. அந்த மேடையில் என்னுடைய கருத்தை செல்வேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் படங்கள்
பொதுவாக ரஜினிகாந்த் தன்னுடைய படங்களுக்கு முன் அரசியல் குறித்து பேசுவது வழக்கம். படம் வெளியாகும் போது அரசியல் குறித்து பேசியே வைரலாவார். ஆனால் இந்த முறை ரஜினி மிக முக்கியமான விஷயம் குறித்து கருத்து சொல்லாமல் விட்டுள்ளார். வேண்டுமென்றே இந்த பிரச்சனை குறித்து பேசாமல் தவிர்த்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications