நீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்!

அநீதிக்கு எதிரான இக்களத்தில் மாணவர்களோடு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும், என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Citizenship Amendment Bill | Jamia Millia Islamia University protest | BJP Tweet

    சென்னை: அநீதிக்கு எதிரான இக்களத்தில் மாணவர்களோடு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும், என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    Citizenship Amendment: Seeman supports students, assured them that NTK will stand with them

    குடியுரிமை சட்ட திருத்தம் காரணமாக நாடு முழுக்க அமைதியற்ற சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்திற்கு வெளியே பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது.

    இதனால் அங்கிருந்த மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் மாணவர்கள் பலர் கடுமையாக காயம் அடைந்தனர். இதற்கு எதிராக டெல்லியில் இன்றும் போராட்டம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெல்லியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்துள்ள டிவிட்டில், ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய கோரத்தாக்குதல் அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்.

    பாசிச பாஜக அரசுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! தாக்குதலுக்கு ஆட்பட்டது மாணவர்கள் மட்டுமல்ல; மகத்தான சனநாயகமும்தான். சட்டத்தின் வழியே சர்வாதிகாரத்தை நிகழ்த்தி கொடுங்கோன்மையை நிலைநாட்ட முனையும் பாசிசம் வீழட்டும்! மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!

    அநீதிக்கு எதிரான இக்களத்தில் மாணவர்களோடு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும், என்று சீமான் தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+