போராட்டக்களமான தமிழகம்.. சென்னை, கோவை, மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.. போலீஸ் குவிப்பு!

தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தென்னிந்தியாவிலும் சூடுபிடித்துள்ள மாணவர்கள் போராட்டம்

    சென்னை: தமிழகம் முழுக்க பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் வட இந்தியாவில் தொடங்கி தமிழகத்திலும் போராட்டம் பரவி வருகிறது.

    பல்வேறு எதிர்ப்புகளை மீறி உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தாக்கல் செய்தார். இந்த மசோதா வெற்றிபெற்று, தற்போது சட்டமாகி உள்ளது.

    இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க கடுமையான போராட்டம் நடந்து வருகிறது. டெல்லி, அசாம், மும்பை என்று பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்ய தொடங்கி உள்ளனர்.

    சென்னை ஐஐடி

    சென்னை ஐஐடி

    சென்னையில் ஐஐடி மாணவர்கள், நியூ காலேஜ் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் லயோலா கல்லூரி மாணவர்களும் போராட்டம் செய்து வருகிறார்கள். பொதுவாக லயோலா கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டம் பெரிய அளவில் பேசப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவை மதுரை

    கோவை மதுரை

    அதேபோல் இன்னொரு கோவை, மதுரையில் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.எஸ்எப்ஐ உள்ளிட்ட பல்வேறு மாணவ அமைப்பினர் தமிழகம் முழுக்க போராட்டம் செய்கிறார்கள் .கோவையில் நடக்கும் போராட்டத்தில் போலீசார் மாணவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளு முள்ளு காரணமாக மாணவர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.

    முற்றுகை

    முற்றுகை

    கோவை, மதுரையில் ரயில் நிலையங்களை மாணவர்கள் முற்றுகை செய்து போராடி வருகிறார்கள். சென்னையில் போராட்டம் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.கிண்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    பலர் கைது

    பலர் கைது

    அதேபோல் மாணவிகள் பலரும் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லோரும் அருகில் இருக்கும் மண்டபங்களில் பூட்டு போட்டு அடைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுப்படுத்த சென்னையில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+