"நீ ஆம்பளைதானே.. வந்து இங்கே கிக் பண்ணு.. வா".. பாலாவை உசுப்பேத்தி.. ஒரண்டை இழுத்த சனம்.. செம ஹாட்!
பிக்பாஸ் வீட்டில் பாலா - சனம் இடையே மோதல் ஏற்பட்டது
சென்னை: "நீ ஆம்பளைதானே.. வா... வந்து பண்ணு.. இங்கே வந்து கிக் பண்ணு" என்று நேற்று சனம் எகிறிய காட்சிகளைதான் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
சண்டை போட்டால்தான் இந்த வீட்டில் தாக்கு பிடிக்க முடியும் என்று பிக்பாஸ் போட்டியாளர்கள் முடிவெடுத்து விட்டார்கள் போலும்.. சம்மந்தமே இல்லாமல், உப்பு சப்பு விஷயத்தைகூட ஊதி பெரிதாக்கி கொண்டு கன்டன்ட் தந்து வருகிறார்கள்.

இவர்கள் எப்போது சண்டை போடுவார்கள் என்று பிக்பாஸ் காத்து கொண்டே இருப்பார் போல தெரிகிறது.. உடனே அது சம்பந்தப்பட்ட புரோமோவையும் போட்டு விடுகிறார்கள்.. அப்படித்தான் நேற்று பாலா - சனம் இடையே வாக்குவாதம் நடந்த புரோமோவை போட்டுவிடவும், ரசிகர்கள் பரபரப்புடனேயே நிகழ்ச்சி துவங்கும்வரை இருந்தனர்.
சனம் - பாலாஜி இடையே உறவு நல்லாதான் போய் கொண்டிருந்தது.. பல விஷயங்களில் சனம் ஷெட்டிக்கு ஆதரவாய் இருந்தவர் பாலாஜி... இதை கமலிடமே சனம் சொல்லி இருந்தார்.. நேற்றைய தினம், சனம் ஷெட்டி, எனக்கு உங்களை பிடிக்கவில்லை..,, நீங்கள் ஸ்ட்ரேட்டர்ஜிக்காக பேசுறது எனக்கு ஹர்ட்டாக்குது என்றார் சனம். இதற்கு பாலாஜி, உங்களிடம் ஸ்ட்ரேட்டர்ஜியை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை... ஏன்னா, நீயெல்லாம் என் லிஸ்ட்டிலேயே இல்லை.. எனக்கும் உங்களை சுத்தமாக பிடிக்கல" என்று சொல்லி கொண்டே போனார்.
அதுக்கு சனம், நீங்க ஒரு விஷயம் செய்தால் அதுக்கு பின்னாடி காரணம் இருக்கும்... எனக்கு எமோஷன்ஸ் ரியலா இருந்தாதான் பிடிக்கும்... இனிமே உங்களிடம் பேச மாட்டேன் என்றார்.. அதற்கு பாலாஜி, நீ போகாதது எனக்கு வருத்தம் தான்.. எப்படி மிஸ் ஆச்சு? சீக்கிரம் கிளம்பு.. என் முன்னாடி இருந்து போய் தொலை.. நீ போனால் எனக்கு சந்தோஷம் என்றார்.
பாலாவுக்கும் சனமுக்கும் நடுவே சம்யுக்தா 'எனாப்... எனாப்' என்று கத்திக் கொண்டே இருந்தாலும், பிரயோஜனம் தரவில்லை.. "நேத்து நைட் என்னை பின்னாடி கிக் பண்ணது யாரு என்று பாலாஜி கத்த, "நீ ஆம்பளைதானே.. வா.. வந்து நீயும் இங்கே கிக் பண்ணிட்டு போ.." என்று பதிலுக்கு கத்த.. போட்டியாளர்கள் மிரண்டு போய் பார்த்து கொண்டிருந்தனர்.. இறுதியில் ஒருவழியாய் அந்த சண்டை முடிவுக்கு வந்தது.
பாலாஜியின் பின்னால் விளையாட்டாக உதைப்பதும், அப்படி விளையாட்டாக உதைப்பதை வைத்து சண்டை போடுவதையும் பார்த்தால், நாளடைவில் நிஜமான, நியாயமான சண்டைகளுக்குகூட இந்த வீட்டில் மரியாதை இல்லாமல் போய்விடும் போல தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications