என்னது.. மோடி - நிர்மலா சீதாராமன் இடையே சண்டையா? பிரதமர் பதவிக்காகவா? பற்றவைத்த திமுக ராஜீவ் காந்தி
சென்னை: பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே பிரதமர் பதவிக்கான சண்டை நடப்பதாக திமுகவை சேர்ந்த ராஜீவ் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை கைப்பற்றியது. குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றார். அந்த 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்த பாஜக 2019 ஆம் தேதி தேர்தலிலும் வென்று ஆட்சியை தக்க வைத்தது.

தொடர்ந்து 2 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றார். மோடி 2.O என்று அழைக்கப்படும் அவரது ஆட்சிகாலம் 4 ஆண்டுகளை நிறைவு செய்து உள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. இவரது ஆட்சியின் கீழ் நிர்மலா சீதாராமன் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
கடந்த ஆட்சியில் நிர்மலா சீதாராமன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். பாஜகவில் பல சீனியர்கள் இருக்கும்போது மாநிலங்களவை உறுப்பினரான நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சரவையின் உயரிய இலாக்காக்களான நிதித்துறை, பாதுகாப்புத் துறை போன்றவை வழங்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலும் மோடியையே பிரதமராக முன்னிட்டு பாஜக தற்போது பரப்புரைகளில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறது.
இதற்கிடையே பாஜகவில் பிரதமர் வேட்பாளருக்கான மோதல் நிலவுவதாகவும், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையே இந்த சண்டை நடைபெறுவதால் விலைவாசி உயர்வு குறித்த பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதாக இதுவரை வெளியாகாத புதிய தகவலை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

அவர் வெளியிட்டு இருக்கும் ட்விட்டர் பதிவில், "மோடியா Vs லேடியா; என... தங்கள் பிரதமர் வேட்பாளர் சண்டையில் நாட்டின் விலைவாசியை சந்தி சிரிக்க வைக்கின்றன மோடியும் நிர்மலா சீத்தாராமனும்! விலைவாசியை கண்டு கொள்ளாத பிரதமர் நரேந்திர மோடி. வேடிக்கை பார்க்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். மக்களின் பாடுதான் திண்டாட்டம்.
உங்கள் பிரதமர் வேட்பாளர் சண்டையை அப்புறம் வைத்து கொள்ளுங்கள் மேடம். முதலில் இந்த காய்கறி விலைவாசியை கட்டுப்படுத்துங்கள்! வெங்காயத்தின் விலையை விடுங்க நீங்க சாப்பிட மாட்டீங்க...!தக்காளி, பருப்பு, கத்தரிக்காய்... அதுலாம் கொஞ்சம் பாருங்க மேடம்.." என்று குறிப்பிட்டு உள்ளார்.
முன்னதாக விலைவாசி உயர்வு குறித்து ராஜீவ் காந்தி ட்விட்டரில் வெளியிட்டு உள்ள பதிவில், "மோடியின் தவறான ஆட்சியால் தாறுமாறாக விலை ஏறிய தக்காளி,வெங்காயம் போன்ற அத்தியாவசிய பொருட்கள்! மவுனமாக இருக்கும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடு முழுவதும் தக்காளி விலை; டெல்லி-120, உ.பி-146, கேரளா-130, காஷ்மீர்-150, பீகார்-120, மும்பை-108, சென்னை-117. தமிழ்நாடு அரசு நியாவிலை கடைகளில் ரூ 50 க்கு விற்பனை செய்கிறது! ஏன் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தூங்குகிறார்?." என்று குறிப்பிட்டார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications