கழுத்தை புடிச்சி நெறிச்சது நீதான்.. அதுக்குதான் கத்தினேன்.. காவல் நிலையத்தில் 2 பெண் போலீஸார் சண்டை
Recommended Video
சென்னை: "என் கழுத்தை புடிச்சி நெறிச்சது நீதான்.. நீயேதான்.. அதுக்குதான் நான் கத்தினே.. இதுதான் உண்மை" என்று பெண் போலீஸ் இருவர் தகராறு செய்து கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
இரு தினங்களுக்கு முன்பு பெண் போலீஸ்கள் சண்டை போட்டு கொள்ளும் வீடியோ ஒன்று வெளியானது. அதில், பெண் உயரதிகாரி, பெண் போலீசுக்கு ஓவர் டியூட்டி போட்டுவிடுவதாகவும், அதிக நேரம் வேலை பார்க்க விடுவதாகவும் நேரடியாக குற்றஞ்சாட்டி இருந்தார்.
இந்த சம்பவம் பெரம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததாக சொல்லப்பட்டது. இரு தரப்பு பெண் போலீசுமே ஆளுக்கு ஒரு செல்போனில் தாங்கள் போட்டு கொண்ட சண்டையை தாங்களே வீடியோ எடுத்து கொண்டார்கள்.

மறுக்கும் போலீஸ்
இதையடுத்து மற்றொரு வீடியோ வெளியாகி உள்ளது. அதில் திரும்பவும் சண்டை போட்டு கொள்கின்றனர். ஆனால் கழுத்தை பிடித்து நெறித்ததாக பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்னொரு பெண் அதிகாரியை குற்றம் சாட்டுகிறார். இதனை மறுக்கும் பெண் அதிகாரி, தன்னைதான் பெண் போலீஸ் கழுத்தை நெறித்தார் என்று சொல்கிறார்.

குற்றச்சாட்டுகள்
காவல்நிலையத்திலேயே இந்த சண்டை நடக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி கொள்கிறார்கள். கண்ணீருடன் ஒருவர் கதறி குற்றச்சாட்டை முன் வைத்தால், இன்னொருவர் தெளிவாக அதை மறுக்கிறார். இந்த சண்டையை ஸ்டேஷனில் உள்ள மற்ற ஆண் போலீசார் வேடிக்கை பார்க்கிறார்கள்.

கழுத்தை நெறிப்பதா?
அதில் ஒரு உயரதிகாரி மட்டும் முன்வந்து பிரச்சனையை விசாரிக்கிறார். "கழுத்தை பிடித்து நெறித்து, அந்த பொண்ணுக்கு ஏதாவது ஒன்று என்றால், அதற்கு யார் பதில் சொல்வது? இப்படிதான் கழுத்தை நெறிப்பதா?" என்று கதறி அழும் பெண் இன்ஸ்பெக்டரை கேட்கிறார். அதற்கு அவர், "நீங்க பாத்தீங்களா சார்.. நான் கழுத்தை நெறித்ததை பார்த்தீங்களா?" என்று அங்கும் பாய்ந்து வாதம் செய்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

விசாரணை
உண்மையிலேயே பெண் போலீசுகளுக்கு நடுவில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. இதனை உயரதிகாரிகள் முறையாக விசாரித்தால் நல்லா இருக்கும். இது அவர்களுக்குள் நடக்கும் விவகாரம் என்று நாம் ஒதுங்கி கொண்டாலும், இப்படி ஸ்டேஷனுக்குள்ளேயே பெண் போலீஸ்கள் கூச்சலிட்டு கொள்வதை பார்க்க சங்கடமாக இருக்கிறது!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications