Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் 14 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது அதிமுக. மீதமுள்ள அமைச்சர்களின் தொகுதிகளில் அதிமுக களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் யார் யார் எனப் பார்க்கலாம்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதில் மொத்தம் 23 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

dmk vs aiadmk

இந்நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ளார். இதில் மொத்தம் 127 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதுவரை மொத்தமாக 150 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் மிக மூத்த அமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் தொகுதியான காட்பாடியில், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் வி. ராமு களம் இறக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக துரைமுருகனின் வசமுள்ள இந்தத் தொகுதியைக் கைப்பற்ற அதிமுக மீண்டும் ராமுவை களமிறக்கி உள்ளது. களமிறக்கியுள்ளது.

அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆத்தூர் தொகுதியில் வேட்பாளராக விஸ்வநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் குறிஞ்சிப்பாடி தொகுதியில் புவனேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருமயம் தொகுதியில் அமைச்சர் ரகுபதிக்கு எதிராக பி.கே.வைரமுத்து மீண்டும் போட்டியிடுகிறார். அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனின் அருப்புக்கோட்டை தொகுதியில் சேதுபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

காங்கேயம் தொகுதியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு எதிராக என்.எஸ்.என்.நட்ராஜ் மீண்டும் போட்டியிடுகிறார். மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் பி. மூர்த்திக்கு எதிராக மாங்குளம் மகேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.

திருவெறும்பூர் தொகுதியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எதிராக ப.குமார் நிறுத்தப்பட்டுள்ளார். தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் பி. கீதா ஜீவனுக்கு எதிராக, சி.த. செல்லப்பாண்டியன் நிறுத்தப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி, அமைச்சர் தங்கம் தென்னரசு போட்டியிடும் திருச்சுழி தொகுதி உள்ளிட்ட தொகுதிகளுக்கு அதிமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+