13 லட்சம் சதுர கிமீட்டரை கபளீகரம் செய்த பருவநிலை மாற்றம்! இந்தியாவில் மீண்டும் வீசுகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிந்துவெளி நாகரிகம் அழிந்ததற்கான முக்கியமான காரணம் என்ன? என்பது பற்றி இந்தியத் தொல்லியல் துறை இயக்குநராகப் பதவியேற்றுள்ள அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றம் பல நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. அது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆந்திராவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மக்கள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுள்ளனர். குஜராத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. இதை எல்லாம் கடந்து கேரள மாநிலம் வயநாட்டில் மூன்று ஊர்கள் நிலச்சரிவில் சிக்கி தரைமட்டமாக மண்ணுக்குள் புதைந்துவிட்டன. இப்படிப் பல நாடுகளில் மழை என்பது அச்சம் தரும் ஒன்றாக மாறி வருகிறது.

climate change indus valley

இந்நிலையில்தான் தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையும் மாற்றமும் ஹரப்பா நாகரிகம் அழியும்போது நிலவிய தட்பவெப்ப நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதாக சில ஆய்வுகள் வெளியாகி உள்ளன. அதனால் ஒரு அச்சம் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் இந்த சிந்துவெளி நாகரிகத்திற்கு என்று ஒரு தனிப் பெருமை இருக்கிறது. அதற்கும் தமிழ்நாட்டில் உள்ள கீழடி நாகரிகத்திற்கும் ஒரு தொடர்பு இருப்பதைப் பற்றிப் பல மானுடவியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இந்த நாகரிகம் அழிந்து போனதற்குப் பருவநிலை மாற்றம் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த நாகரிகம் அழியும்போது இருந்த பருவநிலையும் இப்போது நிலவும் பருவநிலையும் ஒத்துப் போவதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

ஹரப்பா சிந்துவெளி நாகரிகத்துடன் தமிழ்நாட்டில் உள்ள கீழடிக்கு ஒரு நாகரிக தொடர்ச்சி இருக்கிறது என்பதைப் பல ஆண்டுகளாகச் சான்றுகளுடன் பேசி வருபவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். இவர் சமீபத்தில்தான் இந்தியத் தொல்லியல்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் இந்தப் பருவ நிலை ஒப்புமை என்பது எந்தளவுக்கு ஆபத்தானது? இந்தக் கருத்து உண்மைதானா? எனப் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டது.

இதைப் பற்றி அமர்நாத் ராமகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “சிந்துவெளி நாகரிகம் அழிந்து போனதற்குப் பல காரணங்களை இதற்கு முன்பாக சொல்லி வந்தார்கள். இப்போது பருவநிலை மாற்றம்தான் முக்கிய காரணம் எனச் சொல்கிறார்கள். இந்த நாகரிகம் கிமு 3 ஆயிரத்திலிருந்து உயர்ந்து காணப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஹரப்பா நாகரிகம் ஒரு முன்னோடியானது. ஆரம்பக்கட்ட ஹரப்பா நாகரிகம், பண்பட்ட ஹரப்பா நாகரிகம், கடைசியிலிருந்த ஹரப்பா நாகரிகம் என இதை 3 விதமாகப் பிரிப்பார்கள். கிமு 1900க்கு பின்னர் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. இந்தப் பகுதியில் ஒன்றாகப் பாய்ந்து வந்த சட்லஜ் நதியும் யமுனை நதியும் இன்றைக்கு தனித்தனியாகப் பிரிந்து செல்கிறது.

இங்கே இருந்த மண் அடுக்குகள் நகர்ந்த போது நதிகள் பிரிந்தது என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த மண் அடுக்குகள் பருவமாற்றத்தால் நடந்துள்ளது. நதிகள் பிரிந்ததால் இந்த ஹரப்பா வறண்டு போனது. அதனால் அழிய வேண்டிய நிலை உண்டானது. தட்பவெப்ப நிலை மாறியதால் ஹரப்பா நாகரிகம் அழிந்தது என்பது ஒரு காரணி மட்டும்தான். முழு காரணியும் அதுவே என்று சொல்ல முடியாது.

தற்போது நிலவும் தட்பவெப்ப நிலையும் ஹரப்பா அழியும் போது இருந்த தட்பவெப்ப நிலையும் ஒத்துப் போகின்றன என்பது உண்மைதான். ஆனால், இந்த வெப்பநிலை மாற்றத்தால்தான் ஹரப்பா அழிந்தது என்பது முழுமையான உண்மை இல்லை. அதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன.

சிந்துவெளி நாகரிகம் என்பது அதாவது ஹரப்பா என்பது 13 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அதில் ஒரு பகுதி தட்பவெப்ப நிலை மாறுதலால் அழிந்திருக்கலாம். இன்றைக்கு உள்ள கால்வாசி பகுதி இந்தியாவுக்குச் சமமானது இந்தப் பகுதி. இங்கே வாழ்ந்தவர்கள் பல காரணங்களால் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும் நகர்ந்து உள்ளனர். அதை ஆய்வுகள் மூலம் அறிகிறோம்.

உலகில் தட்பவெப்ப நிலை என்பது ஒரே மாதிரியாக எந்தக் காலத்திலும் இருந்தது இல்லை. ஒரு கண்டத்தில் குளிர் இருக்கும் மற்றொரு கண்டத்தில் வெப்பக் காலம் நிலவும். ஆகவே அதை வைத்து இந்த முழு நாகரிகமும் பருவநிலை மாற்றத்தால் மட்டுமே அழிந்தது எனச் சொல்ல முடியாது” என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+