Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடி சார்.. விஜய் பற்றி டெல்லியில் கேக்குறாங்க.. என்ன முடிவு எடுத்தீங்க? பட்டென கேட்ட பியூஷ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி சார், தமிழக அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. டெல்லி பேச்சுவார்த்தைகளில் விஜய் பெயர் வந்துகொண்டிருக்கிறது. களத்தில் அவரை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்? என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் இன்று ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை இன்று சந்தித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. மரியாதை நிமித்தமான சந்திப்பு எனினும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மாறிவரும் அரசியல் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன.

TVK Vijay

பாஜக அதிமுக கூட்டணி இடப்பங்கீடு

இதில் பாஜக அதிமுக இடையிலான கூட்டணி இடப்பங்கீடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் பாஜகவிற்கு 23 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி ஒப்புகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தேமுதிகவுக்கு 6 தொகுதிகள், பாமகவிற்கு 23 தொகுதிகள், தினகரன் திரும்பி வந்தால் அமமுகவிற்கு 3 தொகுதிகள் வழங்க எடப்பாடி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் கூட்டணி சமூகமாக இருக்கும் வகையில் ஆலோசனைகள் செய்யப்பட்டதாகவும், கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைப்பது பற்றியும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

விஜய் தமிழக வெற்றி கழகம்

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் இச்சந்திப்பில் முக்கிய விவாதப் பொருளாயிற்று. இளம் வாக்காளர்கள் மத்தியில் தமிழக வெற்றி கழகமும் விஜய்யும் பெற்றுள்ள கவனம் பாஜகவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இதனால் இன்று விஜயை பற்றி பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

பியூஷ் கோயல், "எடப்பாடி சார், தமிழக அரசியல் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. டெல்லி பேச்சுவார்த்தைகளில் விஜய் பெயர் வந்துகொண்டிருக்கிறது. களத்தில் அவரை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள்?" என கேட்டுள்ளார்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையுடன் பதிலளித்தார்: "அவருக்கு இளைஞர்கள் மத்தியில் கவனம் இருக்கிறது. ஆனால் வெறும் கவனம் தேர்தலில் வெல்லாது. அரசியலுக்கு கட்டமைப்பு, கட்சி நிர்வாகிகள், நிலைத்தன்மை தேவை" என்றார்.

விஜயின் வருகை எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்கும் என சுட்டிக்காட்டிய கோயல், கூட்டணி பற்றி கேட்டார். "வாக்குகள் பிரிந்தால் யாருக்கும் நன்மை இல்லை. திமுக அமைக்கும் கூட்டணி போலவே.. நீங்கள் பெரிய கூட்டணி பற்றி யோசித்தீர்களா?" என்று கேட்டார்.

அதிமுகவின் நிலைப்பாடு சமரசம் செய்யப்படாது.. விஜயை அழைக்க பேசினோம்.. ஆனால் அவர் முதல்வர் வேட்பாளர் ஆக வேண்டும் என்று கேட்கிறார். கூட்டணிகள் உணர்ச்சிவசப்பட்டதாக இல்லாமல், நடைமுறைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அ.தி.மு.க.வுக்கு பாரம்பரியமும் வாக்கு வங்கியும் உள்ளன. நாங்கள் சிறிய.. புதிய கட்சிக்காக முதல்வர் பதவியை எப்படி விட்டுத்தர முடியும்?., என்றார்.

பாஜக பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது.. விஜயிடம் துணை முதல்வர் பதவிக்கு பேசி பாருங்கள் என்று அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். அதிமுக - த.வெ.க - பாஜக கூட்டணி அமைந்தால் அது தமிழ்நாட்டின் அரசியல் ஆட்டத்தையே மாற்றும்.. விஜயை சமாளிக்க பாருங்கள்" என பியூஸ் கோயல் பதில் கூறி உள்ளார்..

இருப்பினும், பழனிசாமி பொறுத்திருந்து பார்ப்பது நல்லது.. விஜய்க்கு அவ்வளவு சீன் கொடுக்க வேண்டாம் என்று கூறியதாக தெரிகிறது. "விஜய் அரசியலுக்குப் புதியவர். அவர் தனது தீவிரத்தை முதலில் நிரூபிக்கட்டும். பின்னர் பரிசீலிப்போம் என்று கூறி உள்ளார் . கூட்டணிப் பேச்சுவார்த்தை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை; எனினும், விஜய், த.வெ.க. குறித்து உயர் மட்டக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது விஜய்க்கான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

இவர்கள் விஜயை சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டாலும்.. விஜய் இவர்களுடன் சேருவாரா என்பதுதான் இப்போது கேள்வியே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+