Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்தடுத்த சம்பவங்கள்.. அரசியல் மோதல் முதல் அந்தரங்க சாட்ஸ் வரை.. பரபரப்பை கிளப்பும் "கிளப் ஹவுஸ்"!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கிளப் ஹவுஸ் செயலி அறிமுகம் ஆகி, மக்கள் பயன்படுத்த தொடங்கிய சில நாட்களில் பெரிய அளவில் அந்த செயலி வைரலாகி உள்ளது. இந்த செயலியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு சர்ச்சைகள் காரசாரமான விவாதங்கள் நடந்துள்ளன.

2020ம் ஆண்டு ஐஓஎஸ் பிளாட்பார்மில் வெளியான "பாட்காஸ்ட்" வகை செயலிதான் கிளப் ஹவுஸ். பாட் காஸ்ட் போன்று ஒருவர் பேச, மற்றவர்கள் எல்லோரும் கேட்கும் வகையில் ஒரு ரேடியோ மாதிரிதான் இந்த கிளப் ஹவுஸ் செயலி உருவாக்கப்பட்டது. ஆனால் கடந்த வருட லாக்டவுனில் அமெரிக்காவில் கிளப் ஹவுஸ் செயலி பெரிய அளவில் வைரலானது.

இதையடுத்து பாட் காஸ்ட் போல இல்லாமல் எல்லோரும் குழுவாக பேசும் வகையில் கிளப் ஹவுஸ் மாற்றப்பட்டது. பின்னர் இந்த செயலி ஆண்டிராய்டு தளத்திற்கும் வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் இருந்து இந்தியாவில் வைரலாகி வருகிறது.

வைரல்

வைரல்

இந்தியாவில் கடந்த மே மாதத்தில் இருந்து கிளப் ஹவுஸ் செயலியை மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த 3-4 வாரங்களாக பல லட்சம் மக்கள் இந்த செயலியை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் இந்த செயலி தொடங்கிய போது இதில் சாதாரண வாதங்கள் மட்டுமே நடந்து வந்தன. சாதாரணமாக தங்களின் வாழ்க்கை சம்பவங்களை பேசுவது, பேய் கதை சொல்வது, மணி கணக்கில் பாட்டு பாடுவது என்று தொடக்கத்தில் இந்த செயலி பெரிதாக ஈர்க்கவில்லை.

ஆனால்

ஆனால்

ஆனால் போக போக இந்த கிளப் ஹவுஸ் செயலியின் களம் மாறியது. கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் குறித்தும், சினிமா குறித்தும், காதல் குறித்தும், பாலியல் ரீதியாகவும் பேச தொடங்கினார்கள். கிளப் ஹவுஸ் செயலியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல்வேறு சர்ச்சைகள் அரங்கேறிவிட்டன. தி பேமிலி 2 தொடர் குறித்து பாடகி சின்மயி செய்த போஸ்ட் சர்ச்சையானது. இது குறித்து கிளப் ஹவுஸில் தீவிரமான விவாதங்கள் நடந்தன.

விவாதம்

விவாதம்

சமந்தாவிற்கு ஆதரவாக சின்மயி பேசியதால் சர்ச்சையானது. இது தொடர்பான கிளப் ஹவுஸ் விவாதங்களில் சின்மயி நேரடியாக கலந்து கொண்டு தனது நிலைப்பாட்டை வெளியிட்டார். கிளப் ஹவுசில் சில விவாதங்களில் கலந்து கொண்டு நேரடியாக பேசினார். இந்த விவாதம் பெரிய அளவில் சண்டையாகும் நிலை கூட சென்றது. இதே கிளப் ஹவுஸில் டாக்டர் ஒருவர் வெளியிட்ட தவறான கருத்துக்கள் காரணமாக சின்மயி வழக்கு தொடுக்கும் அளவிற்கும் கூட விவாதங்கள் சென்று உள்ளன.

Recommended Video

    Chinmayi - Doctor Aravind Raj இடையே வெடித்த சண்டை | Oneindia Tamil
    சர்ச்சைகள்

    சர்ச்சைகள்

    இப்படி கிளப் ஹவுஸ் தொடங்கிய முதல் நாளில் இருந்தே இதில் பல சர்ச்சைகள் நிகழ்ந்தேறிவிட்டன. அரசியல் ரீதியாக பல ரூம்களில் கிளப் ஹவுஸில் மோதல்கள் நடந்து வருகின்றன. இன்று கைது செய்யப்பட்ட யூ டியூபர் கிஷோர் கே சாமி கூட கிளப் ஹவுஸ் ரூம் ஒன்றில் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று சவால் விட்டார். அரஸ்ட் கிஷோர் கே சாமி என்ற தலைப்பிலேயே இந்த ரூமை அவர் நடத்தி வந்தார்.

    அரஸ்ட்

    அரஸ்ட்

    இது சர்ச்சையான நிலையில் தற்போது கிஷோர் கே சாமியும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கேமர் மதன் போன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான யூ டியூபர் குறித்தும் இதில்தான் பல உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டன. இப்போது கேமர் மதனை போலீஸ் கைது செய்யும் நிலையில் உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க காதல் ரீதியாகவும் பலர் பேசுகிறார்கள். புதிதாக பார்க்கும் பெண்களிடம் பிடித்ததை சொல்வது, டிபியை பார்த்தே காதல் சொல்வது, சூட் தி சாட், வித விதமான பிக் அப் லைன் சொல்லி எதிர்பாலினத்தவரை கவர்வது என்று பல கலர்புல் ஜாலி விஷயங்களும் கிளப் ஹவுசில் நடக்கின்றன.

    சாட்

    சாட்

    இப்படி அரசியல் ரீதியாக மோதல் நடக்கும் நிலையில் இன்னொரு பக்கம் உல்லாச சாட்களும் இரவு நேரங்களில் நடந்து வருகின்றன. பாலியல் ரீதியாக பொதுவில் சாட் செய்வது, தெரியாத நபர்களிடம் பேசுவது என்று பல்வேறு வகையான சாட்கள் இந்த கிளப் ஹவுசில் நடக்கின்றன. கிளப் ஹவுசில் மூடிய சாட்கள் செய்யும் வசதி இருந்தாலும், பெரும்பாலும் ஓபன் சாட்கள்தான் செய்யப்படுகின்றன.

    ஓபன் சாட்

    ஓபன் சாட்

    இதில் பெரிய அளவில் பிரைவசி கிடையாது. வெளிப்படையாக பெண்கள், ஆண்கள் எல்லோரும் பிரைவசி பற்றி கவலைப்படாமல் இதில் பேசி வருகிறார்கள். இது ஒரு வகையில் ஆக்கபூர்வமான விஷயம் என்றாலும் கூட இன்னொரு பக்கம் யார் வேண்டுமானாலும் உங்களுடைய ஆடியோ சாட்களை ரெக்கார்ட் செய்ய முடியும்,யார் வேண்டுமானாலும் தவறாக என்ன வேண்டுமானாலும் பேச முடியும் என்பதால் கிளப் ஹவுஸ் கொஞ்சம் சிக்கலான செயலியாகவும் உள்ளது.

    வரும் நாட்கள்

    வரும் நாட்களில் இந்த செயலி கண்டிப்பாக புதிய பல சர்ச்சைகளையும், விவாதங்களையும் கண்டிப்பாக ஏற்படுத்தும். எல்லா சமூக வலைத்தளங்களை போலவே கிளப் ஹவுஸ் செயலியும் தனக்கே உரிய பிளஸ் மற்றும் மைனஸ்களை கொண்டு உள்ளது. வரும் நாட்களில் தமிழ்நாட்டில் மிகமுக்கியமான செயலியாக கிளப் ஹவுஸ் விரைவில் உருவெடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+