அடுத்த அதிரடி.. தமிழக முதல்வர்தான் வேந்தர்.. சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா நிறைவேறியது
சென்னை: முதல்வரை வேந்தராக கொண்டு சென்னை அருகே சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கும் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
பொதுவாக அந்தந்த மாநிலங்களில் பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் செயல்படுவர். தமிழகத்தில் நீட் தேர்வு தொடங்கி 7 தமிழர்கள் விடுதலை வரை தமிழக ஆளுநர் ஆர் என் ரவியுடன் தமிழக அரசு போராடி வருகிறது.
இவை மட்டுமல்லாமல் நிறைய சட்டமசோதாக்களை இயற்றி விட்டு அவை ஆளுநருக்கு அனுப்பப்பட்ட போதிலும் அந்த கோப்புகளை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமலேயே இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

நிதி நிலை அறிக்கை
இந்த நிலையில் தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவமுறையின் பெருமையைப் போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழகத்தில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சென்னைக்கு அருகே புதிய பல்கலைக்கழகம்
இந்த பல்கலைக்கழகத்தை சென்னைக்கு அருகே தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதற்கான சட்டமசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு இயல், இசை , கவின் கலை பல்கலைக்கழகத்தை தவிர பிற அனைத்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் இருந்து வருகிறார்.

பல்கலைக்கழக மசோதா
தமிழகத்தில் பல்கலைக்கழக மசோதா கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டது. அதில் அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வர் செயல்படுவார் என்றும் துணை வேந்தர்களை முதல்வரே நியமிப்பார் என்றும் சட்டம் இயற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

சித்த மருத்துவ பல்கலைக்கழகம்
இந்த நிலையில் புதிதாக தொடங்கப்படும் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வர் இருப்பார் என்று சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் இணை வேந்தராக சுகாதாரத் துறை அமைச்சர் இருப்பார்.

துணை வேந்தர் யார்
பல்கலைகழக மசோதா தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக்கழகத்திற்து துணை வேந்தர், பதிவாளரும் தேர்வு செய்யப்படுவர் என தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications