தினகரனை தவிர யார் வந்தாலும் ஓகேதான்.. எடப்பாடி பழனிச்சாமி
தினகரனை தவிர மற்றவர்கள் இணையலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: டிடிவி தினகரனைத் தவிர யார் வேண்டுமானாலும் தங்களுடன் இணையலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாகவே அமமுகவும், அதிமுகவும் இணைய போவதாக செய்திகள் பரவின. இது சம்பந்தமாக தங்க.தமிழ்செல்வன் பகிரங்க விருப்பத்தை வெளியிட, அதை ஒரு சில அமைச்சர்கள் வரவேற்றனர்.
ஆனாலும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இதற்கு சம்மதம் சொல்லவில்லை. "அதிமுகவுடன் அமமுக இணைவது இமயமலையுடன் காளான் இணைவது போன்றது. தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆசை இருக்கிறதுபோல தெரிகிறது. எனவே அவர் வரட்டும். அதுவும் இல்லாமல் கட்சித் தொண்டர்களுக்கு ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்" என்று தெரிவித்திருந்தார்.

அமமுக - அதிமுக
இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது அவர், அமமுக - அமமுக இணைப்பு குறித்து சொன்னதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டியது எங்களது கடமை பிரிந்து சென்ற தொண்டர்கள் அனைவரும் எங்களோடு இணைந்து செயலாற்ற வேண்டுமென்று நானும், ஒருங்கிணைப்பாளரும் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

பலர் இணைந்தனர்
அதன்படி பல பேர் இணைந்திருக்கின்றார்கள். அமமுக கட்சியின் ராமநாதபுர அமைப்புச் செயலாளர் என் தலைமையில் நேற்று கட்சியில் சேர்ந்திருக்கின்றார். அவர்களுக்கு அதிமுகவில் உரிய மரியாதை அளிக்கப்பட்டது.

டிடிவி தினகரன்
இதேபோல, வருங்காலங்களிலும் அமமுகவில் இருந்து வருபவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். ஆனால் டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் எங்களுடன் இணைந்து கொள்ளலாம்" என்றார்.

சட்ட நிபுணர்கள்
முன்னதாக செய்தியாளர்கள் மேகதாட்டு விஷயத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, "மேகதாட்டு விவகாரத்தை பொறுத்தவரை, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றோம். இதுகுறித்து தமிழக அரசு சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று பதிலளித்தார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications