ஒரே செகண்டில் உணர்ச்சிவசப்பட்ட எடப்பாடியார்.. எல்லாத்துக்கும் காரணம் "அந்த" 2 பேர்தான்.. செம!
எடப்பாடியார் தாயாரின் வெண்கல சிலையை நிர்வாகிகள் பரிசாக தந்தனர்
சென்னை: கூடியிருந்த எல்லாரையும் தாண்டி, ஒரு ஓரமாக நின்றிருந்த 2 அதிமுக நிர்வாகிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார் முதல்வர் எடப்பாடியார்.. இதனால் அதிமுக கூடாரமே முதல்வரை உச்சி முகர்ந்து வருகிறது.
நம் முதல்வரை பொறுத்தவரை ரொம்பவும் எளிமையானவர்.. யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சென்று எளிதாக அணுகக்கூடியவர்.

அதேபோல முதல்வருக்கு எந்த பந்தாவும் காட்ட தெரியாது... சாலையில் எங்காவது வெளியூருக்கு சென்று கொண்டிருந்தால்கூட, காரை நிறுத்திவிட்டு, பொதுமக்களை சந்தித்து பேசுவார்.. அக்கறையாக நலன் விசாரிப்பார்.. எல்லாரையும் மாஸ்க் போடுங்க என்று அட்வைஸ் செய்துவிட்டு கிளம்பி செல்வார்.
இதுபோலவேதான் அதிமுக நிர்வாகிகளிடமும் அன்பாகவே நடந்து கொண்டு வருகிறார்.. நேற்று முன்தினம் தீபாவளிக்கு தமிழக மக்களுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லி இருந்தார்.. இருந்தாலும் எடப்பாடியாருக்கு இந்த முறை தீபாவளி இல்லை. அவரது அம்மா இறந்துவிட்டதால், தீபாவளி பண்டிகை இந்த வருடம் இல்லை என்றாலும், சிலர் முதல்வருக்கு தங்கள் வாழ்த்தை தெரிவித்து கொண்டார்கள். .
தீபாவளிக்கு முதல்நாள் அமைச்சர்கள் சிலர் முதல்வரை சந்திக்க காத்திருந்தபோது, புதுக்கோட்டை நகரமன்ற முன்னாள் தலைவர் ராஜசேகரனும், புதுக்கோட்டை மாவட்ட வழக்கறிஞர் அணித் தலைவர் நெவளிநாதனும் அங்கே நின்றிருந்தனர்.. அவர்கள் அமைச்சர்களுக்கு பின்னால் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தனர்.
அங்கு வந்த முதல்வர் எல்லாருக்கும் வணக்கம் சொல்லியபடி, அவர்கள் 2 பேரையும் பார்த்துவிட்டார்.. பிறகு கை காட்டியும் கூப்பிட்டார்.. அப்போது அவர்கள் கையில் ஒரு வெண்கல சிலை இருப்பதை கண்டு முதல்வர் பரவசமடைந்தார். ஏனென்றால், அது அவரது அம்மாவின் சிலையாகும்.. அதுமட்டுமல்ல, அன்றுதான் அம்மா இறந்து 30வது நாளும்கூட.. "அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை" என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்த அந்த சிலையை கண்டதும் முதல்வர் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கினார்..
"குடுங்க.. ரொம்ப சந்தோஷம்.. ரொம்ப நல்லா இருக்கு.. எங்கே செஞ்சீங்க.. நல்ல நாள்ல தந்திருக்கீங்க" என்று கேட்டு ஆசையுடன் வாங்கி கொண்டு, அவர்களை தட்டி கொடுத்தாராம் முதல்வர்... அந்த சிலையை பூஜை அறையில் வைத்ததுடன், உணர்ச்சிவசப்பட்டு அதை பார்த்து கொண்டே இருந்தாராம் முதல்வர்!
-
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம்












Click it and Unblock the Notifications