சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அடங்காமல் பொங்கும் பால்".. தொடரும் சர்ச்சைகள்.. கடுப்பான முதல்வர்.. அமைச்சருக்கு கடைசி வார்னிங்!

அமைச்சர் ராஜேந்தர் பாலாஜியை முதல்வர் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது செம கடுப்பில் இருக்கிறாராம் முதல்வர்.. "கவனமா பேசுங்க" என்று நேரடியாகவும், "அவரை அமைதியா இருக்க சொல்லுங்க" என்று மறைமுகமாகவும் சொல்லி பார்த்தும்.. அமைச்சர் கேட்கவில்லை என்றே கூறப்படுகிறது.

முன்பெல்லாம் ராஜேந்திர பாலாஜி பேசினால் சர்ச்சையானாலும், அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது.. மனசில் பட்டதை யதார்த்தமாக பேசுகிறார் என்றுதான் எடுத்து கொள்ளப்படும். அவ்வளவு ஏன், மோடியை டாடி என்று பலமுறை சொன்னபோதுகூட யாரும் அதை கண்டுகொள்ளவில்லை.

ஆனால் சமீப காலமாக அப்படி இல்லை.. இவர் பேசுவது தெரிந்துதான் பேசுகிறாரா, தெரியாமல் பேசுகிறாரா? அவருடைய கருத்துக்களா, அல்லது அதிமுகவின் அதிகாரப்பூர்வ கருத்துக்களா என்ற குழப்பம் தொண்டர்களிடையே ஏற்படும் அளவுக்கு வந்துவிட்டது.

பாஜக

பாஜக

அதிமுகவைவிட பாஜகவை இந்த அமைச்சர் புகழ்வதுதான் அதிகமாக இருந்துள்ளது.. இத்தாலியில் பிறந்த ராகுல்காந்திக்கு இந்தியர்களின் மீது என்ன அக்கறை இருக்கும்" என்று கேட்டுவிட்டு, காங்கிரசாரிடம் வசமாக வாங்கி கட்டிக் கொண்டார். எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் எந்த ஊரில் பிறந்தார்கள் என்ற காங்கிரஸாரின் பதில் கேள்விக்கு இவரால் பதில் சொல்ல முடியவில்லைதான்!

பத்திரிகையாளர்

பத்திரிகையாளர்

ஒருமுறை நாசூக்காகவே முதல்வர் இதை அமைச்சரிடம் பேசினாராம்.. "நன்றாக பேசுகிறீர்கள்.. ஆனால் கவனமாக இருக்க வேண்டும்.. கொஞ்சம் அமைதியாக இருங்கள்" என்று சொன்னாராம்.. ஆனால் இதற்கு பிறகுதான் மிக சர்ச்சைக்குரிய கருத்தை அதிகமாக பேசினார். குறிப்பாக, பெரியார் குறித்து ரஜினியின் பேச்சுக்கு பதில் கொடுத்த அமைச்சரின் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தன. அதேபோல, திருச்சியில் பாஜக பிரமுகர் விஜயரகு கொலை வழக்கு குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் ராஜேந்திர பாலாஜி.

இந்துக்கள்

இந்துக்கள்

அதில், "இஸ்லாமிய பயங்கரவாதத்தைகையில் பிடித்துக்கொண்டு போய் கொண்டிருக்கிறார்கள். இப்படியே இந்துக்களை கொல்லும் வேலையைத் தொடர்ந்தார்கள் என்றால், பிரச்னை வேறுவிதமாக செல்லும். இந்துக்களை கொல்லும் இயக்கத்துக்கு திமுக துணை போனால், இந்து பயங்கரவாதம் உருவாவதை தடுக்க முடியாது... இஸ்லாமியர்கள் வாழக்கூடிய தெருக்களில் முன்பெல்லாம் அதிமுகவுக்கு பாதிக்குப்பாதி ஓட்டு விழுந்தது. இப்போது பத்து ஓட்டுகூட விழுவது இல்லை.. இளைஞர்களை பிரெய்ன் வாஷ் செய்கிறார்கள்... ஆயுதம் ஏந்தவைக்கிறார்கள்" என்றார்.

திமுக மனு

திமுக மனு

கடைசியில் இந்த விவகாரம் ஆளுநரிடம் திமுக மனு அளிக்கும்வரை போய்விட்டது.. இது முதல்வருக்கு தர்மசங்கடத்தையே திரும்பவும் ஏற்படுத்தியது.. மறுபடியும் கூப்பிட்டு கண்டித்துள்ளார். இதனிடையே "ரஜினி மலை, அஜித் தலை" என்றார்.. சசிகலா ஜெயிலில் இருந்து வெளியே வர வேண்டி கொள்கிறேன், என் பிரார்த்தனையே அதுதான்" என்றார்.. இவை எல்லாம் அமைச்சரின் தனிப்பட்ட கருத்து என்றே வைத்து கொண்டாலும், குமுதம் ரிப்போர்ட்டர் விஷயத்தில் அதிருப்திதான் மிஞ்சியது.. விருதுநகர் செய்தியாளர் மீது நடத்திய தாக்குதலில் அமைச்சருக்கு எதிராக கண்டனத்தை மொத்தமாக கொண்டு வந்து குவித்தது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

இறுதியில் ஜெயக்குமார், ஆர்வி உதயகுமார் போன்றோர் முதல்வரிடமே அமைச்சரை பற்றி புகார் கொண்டுபோய் விட்டார்களாம்.. இதனால் எடப்பாடியார் அப்செட் ஆகி உள்ளாராம்.. "அவர் ஏன் இப்படி பேசுகிறார்.. எவ்வளவு பிரச்னையைத்தான் சமாளிக்கிறது... சர்ச்சைகளில் சிக்க மாட்டேன் என்று சொன்னாரே.. திரும்பவும் ஏன் அப்படி நடந்து கொள்கிறார்.." என்று காட்டமாக கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது. மேலும் கடைசி வார்னிங் தந்து இருப்பதாகவும் தெரிகிறது.

நலத்திட்டங்கள்

நலத்திட்டங்கள்

எடப்பாடியாரை பொறுத்தவரை சமீப காலமாக சிறப்பாக பணியாற்றி கொண்டுள்ளார்.. குறிப்பாக மக்களின் திட்டங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.. அதிமுக மீதான அதிருப்திகளும் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.. நடக்க போகும் சட்டசபை கூட்ட தொடரிலும் எப்படியும் நல்ல நல்ல அறிவிப்புகளை கண்டிப்பாக வெளியிடுவார் என்றும் அதன்மூலம் மக்கள் மத்தியில் மேலும் அவருக்கு செல்வாக்கு உயரும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது.. இந்த சமயத்தில் அதிமுக அமைச்சர்களில் ஒருவர் திரும்ப திரும்ப சர்ச்சை வெடிக்கும் பேச்சுக்களையும், விவகாரங்களிலும் சிக்கி வருவது அரசுக்குதான் களங்கத்தை தரும்! ராஜேந்திர பாலாஜி அதிமுக அமைச்சரா? பாஜக அமைச்சரா என்பதுதான் அனைவரின் குழப்பமும்!

English summary
sources say that, cm edapadi palanisamy warns minister rajendra balaji
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X