சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

123 பேர் இருக்காங்க.. பிரச்சினை இல்லை.. ஆனா திமுக பல்க்கா 109 வச்சிருக்கே.. கிலியில் எடப்பாடியார்

ஆட்சியை தக்க வைத்து கொள்ள போராடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

Recommended Video

    6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..

    சென்னை: எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து இல்லைதான்.. ஆனாலும் திமுக தரப்பில் இருந்து எப்போ, என்ன, பகீர்கள் வருமோ என்ற ஒரு கிலி இருந்து கொண்டே இருக்கிறதாம். இதற்காக சில வேலைகளையும் கையில் எடுத்து வருகிறதாம் முதல்வர் தரப்பு!

    ஆட்சி கவிழ்ப்பு நிச்சயம் என்று சொல்லி சொல்லி பிரச்சாரம் செய்தது திமுக. அதற்கேற்றார்போல், ஏற்கனவே சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என பேரவைச் செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது முதல் சந்தேகமே இந்த தீர்மானம் எடுத்து கொள்ளப்படுமா என்பதுதான்,

    சட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்களில் 233 பேர் இருக்கிறார்கள். இந்த முறை திமுக சார்பில் 13 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதாவது ஏற்கனவே 88 உறுப்பினர்கள் இருந்த நிலையில், இப்போது புதிதாக வெற்றி பெற்றவர்களோடு சேர்த்து 101 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணியை சேர்த்து கொண்டோமானால், காங்கிரஸ் 7, முஸ்லீம் லீக் 1 என மொத்தம் 109 பேர் அதிகரித்துள்ளனர்.

    அதிமுக - அமமுக இணைப்பு எப்போது.. என்ன பிளான்.. பரபரக்கும் அரசியல் களம் அதிமுக - அமமுக இணைப்பு எப்போது.. என்ன பிளான்.. பரபரக்கும் அரசியல் களம்

    கலைச்செல்வன்

    கலைச்செல்வன்

    இந்த இடத்தில்தான், எம்எல்ஏக்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் இவர்களை தவிர அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு என மொத்தம் 6 பேர் ஆதரவா, எதிர்ப்பா என்று வெளிப்படையாக சொல்லாமல் குழப்பி அடித்து வருகிறார்கள்.

    சபாநாயகர்

    சபாநாயகர்

    தேர்தலில் அமமுக தோல்வியை சந்தித்துள்ளதால், பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி மூன்று பேருமே அதிமுகவுக்கே ஆதரவு அளிப்பார்கள் என தெரிகிறது. அப்படி பார்த்தால், இப்போது வெற்றி பெற்ற 9 பேர், சபாநாயகருடன் சேர்த்து அதிமுகவுக்கு 123 பேர் இருக்கிறார்கள்.

    ஆட்சி கவிழ்ப்பு

    ஆட்சி கவிழ்ப்பு

    ஆட்சிக்கு பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், எடப்பாடி தரப்புக்கு திமுக பல்க்-ஆக 109 பேருடன் இருப்பது அவ்வளவு சாதகமான விஷயம் இல்லை என சொல்லப்படுகிறது. ஆட்சியை கவிழ்க்க எப்படியும் அதிமுக எம்எல்ஏக்களை எப்படியும் திமுக விலை பேசக்கூடும் என்பதால், அதே யுக்தியை அதிமுகவும் கையில் எடுக்க உள்ளது.

    ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி, திமுகவில் இருந்து 40 எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு வர தயாரா இருக்காங்க" என்று கொளுத்தி போட்டிருந்தார். இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. ஆனால், எடப்பாடி அரசுக்கு வேறு வழியில்லை.. திமுக தரப்பில் எத்தனை பேர் வருகிறார்களோ, அத்தனை பேருக்கும் வலை வீச முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். குறைந்தது 10 எம்எல்ஏக்கள் கிடைத்தால்கூட அது அதிமுகவுக்கு பின்னாளில் பலமாக இருக்கும் என கணக்கு போடுகிறது.

    எம்எல்ஏக்கள் ஊதியம்

    எம்எல்ஏக்கள் ஊதியம்

    வாரிசுகளுக்கு சீட் தந்தது, மூத்த நிர்வாகிகளை கண்டுகொள்ளாமல் விட்டது என திமுகவில் சிலர் அதிருப்தியில் உள்ளனராம். இந்த மாதிரி ஆட்களைதான் அதிமுக குறி வைத்து ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. இதை தவிர போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய பிரச்சனையில், திமுக எம்எல்ஏக்களின் ஊதியத்தை வாங்க மாட்டோம் என்று ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை பெரும்பாலான திமுக எம்எல்ஏக்களே விரும்பவில்லையாம். இவர்களையும் தங்கள் பக்கம் இழுக்க அதிமுக தரப்பு காய் நகர்த்த துவங்கி உள்ளது.

    குட்கா விவகாரம்

    குட்கா விவகாரம்

    இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஆட்சி இன்னும் 2 வருஷத்துக்கு இருப்பதால், திமுகவின் 21 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்றே தெரிகிறது. இதற்காக குட்கா வழக்கை தூசி தட்டி எடுக்கிறது.. குட்கா பொட்டலங்களை பேரவையில் பிரித்து காட்டிய திமுக எம்எல்ஏக்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்தால் அதிமுக அரசு இன்னும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்று கணக்கு மேல் கணக்கு போட்டு வருகிறதாம்.

    English summary
    CM Edapadi Palanisamy government has taken several steps to retain a 2-year rule. It is said that efforts are being made to pull up DMK MLAs atleast ten in the AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X