சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலினை "ஓவர்டேக்" செய்த எடப்பாடியார்.. இதெல்லாம் ஜெ. ஸ்டைல்.. செம தில்.. மிரண்டு பார்க்கும் திமுக!

எடப்பாடி பழனிசாமி தேர்தலில் வேகம் காட்டி செயல்படுகிறார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவை அனைத்து விஷயங்களிலும் முந்தி கொண்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. இதனால் நாளுக்கு நாள் அதிமுகவில் அதிரடிகள் பெருகி கொண்டிருக்கின்றன.

இந்த முறை தேர்தல் போன்று, இதற்கு முன்பு இருந்திருக்காது.. அப்படி ஒரு இழுபறி நடந்து கொண்டிருக்கிறது.. அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிகள் இறுதி செய்யப்படவில்லை.. உறுதியும் செய்யப்படவில்லை..

ஆனாலும் இரு கட்சி தலைவர்களும் ஆளுக்கு ஒரு பக்கம் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. இதில் வண்டியை கிளப்பி கொண்டு பிரச்சாரத்தில் குதித்தது எடப்பாடியார்தான்.. இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று ஓபிஎஸ் அறிவித்த அடுத்த கணமே, "என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த அண்ணன் ஓபிஎஸ்க்கு நன்றி" என்று சொல்லிவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

இப்படி ஒரு பிரச்சாரம் நடக்க போவது ஓபிஎஸ்-க்குகூட அன்றைய தினம் தெரியாது.. அன்றிலிருந்து ஒவ்வொரு கட்ட பிரச்சாரமும் சூடு பிடித்து வருகிறது.. சசிகலா வருகைக்கு முன்பு வரை திமுகவே டார்கெட்டாக இருந்தது.. சசிகலா வந்த பிறகு தினகரனே டார்கெட்ஆகி வருகிறது.. இப்போதெல்லாம் பிரச்சாரங்களில் இரு தரப்பையும் லிஸ்ட் போட்டு விமர்சித்து கொண்டிருக்கிறார்.

வாக்குறுதி

வாக்குறுதி

அதுபோலவே, அறிவிப்புகளையும் வெளியிட்டு இருக்கிறார்.. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது, இது செய்வோம் என்று ஒரு எதிர்க்கட்சியானது வாக்கு தருவது இயல்பான ஒன்றுதான்.. அவர்களால் அது மட்டுமே செய்ய முடியும். ஆனால், ஆட்சி கையில் உள்ளதால், திமுகவின் அறிவிப்புகளை டக் டக்குனு நிறைவேற்றி கொண்டிருக்கிறார் எடப்பாடியார்.

விருப்ப மனு

விருப்ப மனு

அதேபோல, தேர்தலுக்கு இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.. அநேகமாக மார்ச் மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட உள்ளது... அதற்குள் அதிமுக விருப்ப மனுக்களை விநியோகித்து தேர்தல் பணிகளில் மும்முரம் காட்ட ஆரம்பித்துவிட்டது.. இப்போதுகூட, விருப்ப மனு தாக்கலை முதல் கட்சியாக அதிமுகதான் அறிவித்துள்ளது..

ஹாட்ரிக்

ஹாட்ரிக்

இதெல்லாம் ஜெயலலிதா பாணி ஆகும்.. அவர்தான் மற்ற கட்சிகளைவிட முந்திக் கொண்டு விருப்ப மனு அறிவிப்பு செய்வார், அவர்தான் வேட்பாளர் லிஸ்ட் முதலில் அறிவிப்பார்.. அவர்தான் எல்லாருக்கும் முன்பு, பிரச்சாரத்துக்கு கிளம்பி சென்றுவிடுவார்.. அதே ரூட்டில்தான் எடப்பாடியாரும் சென்று கொண்டிருக்கிறார்.. அவ்வளவு ஏன், ஜெயலலிதாவின் சென்ட்டிமென்ட் பிரச்சார இடத்தில் இருந்தே இந்த முறையும் எடப்பாடியாரும் பிரச்சாரத்தை துவக்கி இருக்கிறார்.. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் அவரை போலவே, அதிரடிகள் காட்டி வருவதால், மறுபடியும் முதல்வர் பதவியிலேயே எடப்பாடியார் நீடிப்பாரா? ஹாட்ரிக் போட்டு விடுவாரா? பார்ப்போம்..

English summary
CM Edapadi Palanisamys bold announcement and overtake MK Stalin
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X