சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சத்தமே இல்லாமல் அதிரடி காட்டும் எடப்பாடியார்.. அதிர வைக்கும் மூவ்கள்.. ஓரங்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?

கட்சிக்குள் எடப்பாடியாரின் செல்வாக்கு உயர்ந்து கொண்டே வருகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி..அதிமுகவுக்கு ஆதரவு தாங்க.. மோடியிடமே நேரடியாக கேட்ட எடப்பாடி!-வீடியோ

    சென்னை: எடப்பாடியார் போட்ட மாஸ்டர் பிளான்களில் ஓபிஎஸ்-ன் செல்வாக்கு விறுவிறுவென சரிந்து கொண்டே வருகிறது!

    கடந்த முறை எம்பி தேர்தலில், ஓபிஎஸ் கை காட்டிய பெரும்பாலானோருக்கு சீட் வழங்கப்படவில்லை. இது ஒரு ஆதங்கமாக இருந்தாலும், மகனுக்கு சீட் தந்துவிட்டதால் எதுவும் பேச முடியாமல் இருந்தார் ஓபிஎஸ்! இதற்கு அடுத்து ராஜ்ய சபா வேட்பாளர்கள் 2 பேரை அறிவிக்கும்போதும், மைத்ரேயன், கோகுல இந்திரா, மனோஜ் பாண்டியன், அன்வர்ராஜா என பலர் முட்டி மோதினர்.

    இதற்கும் ஓபிஎஸ்ஸின் சாய்ஸ் மு தம்பிதுரை, கேபி.முனுசாமி போன்ற சீனியர்கள் பெயரை முன்மொழிந்து இருந்தார். ஆனால், வட மாவட்டங்களான வேலூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜான், என் சந்திரசேகரனுக்கு வாய்ப்பு தரப்பட்டது. இதுவும் ஓபிஎஸ் தரப்பை கடுமையாக ஆதங்கப்படுத்தி விட்டதாம். ஒருவர் கூட தென் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று வெளிப்படையாக புலம்பினர்.

    புறக்கணிப்பு?

    புறக்கணிப்பு?

    இப்போது 3-வது முறையாக இடைத்தேர்தலிலும் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. இந்த முறை இடைத்தேர்தலின் வெற்றி இரு கட்சிகளின் நிஜ செல்வாக்காக பார்க்கப்படுகிறது. அத்துடன், உள்ளாட்சி தேர்தலுக்காக அடித்தள வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக பலமான வேட்பாளரை நிறுத்து ஆரம்பம் முதலே சுறுசுறுப்பானது.

    விக்கிரவாண்டி

    விக்கிரவாண்டி

    விக்கிரவாண்டியை முழுக்க முழுக்க சிவி சண்முகத்தின் பொறுப்பிலேயே விட்டுவிட்டாராம் முதல்வர் எடப்பாடி. முதலில் சிவி சண்முகத்தின் அண்ணன் ராதாதான் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அவரது மகன் விபத்தில் காயமடைந்துவிட்டதால், ஆஸ்பத்திரிக்கு அலைந்து கொண்டிருப்பதால், இந்த தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று சொல்லி விட்டார்.

    சாய்ஸ்

    சாய்ஸ்

    ஒருவேளை, ராதா தேர்தலை சந்தித்திருந்தால், சீட் தர முதல்வர் கண்டிப்பாக முன்வந்திருப்பாராம். அதனால், அடுத்த சாய்ஸ் யார் என்பதையும் நீங்களே சொல்லுங்கள் என்று சிவி சண்முகத்திடம் முதல்வர் கேட்க, அதன்படிதான், முத்தமிழ்செல்வன் கைகாட்டப்பட்டுள்ளார்.. எடப்பாடியாரும் ஓகே சொல்லி உள்ளார்.

    விழுப்புரம்

    விழுப்புரம்

    இதற்கும் காரணங்கள் உள்ளதாம். விக்கிரவாண்டியில், முன்னாள் எம்பி லட்சுமணன் சீட் கேட்டு எடப்பாடியாரை நெருக்கி வந்தார். இவர் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர். இந்த ஒரு காரணத்துக்காகவே எடப்பாடியார் யோசித்துள்ளார். திரும்பவும் லட்சுமணன் பெயரை முன்மொழிந்தால், தேவையில்லாத பிரச்சனைகள் எழுந்துவிடும் என்பதால்தான், சிவி சண்முகம் சாய்ஸ் ஓகே ஆகிஉள்ளது. அது மட்டுமில்லை, விழுப்புரத்தை பொறுத்தவரை திமுகவின் பொன்முடிதான் ஆல் இன் ஆல்!

    மனோஜ் பாண்டியன்

    மனோஜ் பாண்டியன்

    அவரை சமாளிக்க சிவி சண்முகம்தான் சரியான ஆள்... அதனால்தான் சிவி சண்முகம் போக்குக்குகே சென்றதுடன், அதேநேரத்தில் ஓபிஎஸ்-ன் ஆதரவு வேட்பாளருக்கும் சீட் தராமல் விட்டுவிட்டார் முதல்வர்! இதேதான் நாங்குநேரியிலும் நடந்துள்ளது. எப்படியாவது ஓபிஎஸ்-ஐ வைத்து சீட் வாங்கிவிட வேண்டும் என்று மனோஜ் பாண்டியன் கணக்கு போட்டிருந்தார். ஆனால் தளவாய் சுந்தரத்தை வைத்து ஓபிஎஸ்-க்கு எதிராக காய் நகர்த்தி... அதன்படியே ரெட்டியார்பட்டி நாராயணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சீனியர்கள்

    சீனியர்கள்

    சுருக்கமாக சொல்லப்போனால், வடக்கே விக்கிரவாண்டி, தெற்கே நாங்குநேரி என்ற 2 தொகுதிகளிலுமே ஓபிஎஸ்-ன் வேட்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால், 2 தொகுதிகளிலுமே முதல்வர் நேரிடையாக சம்பந்தப்படவில்லை. சிவி சண்முகம், தளவாய் சுந்தரம் என்ற 2 சீனியர்களை வைத்தே வேட்பாளர் தேர்வை நடத்தி முடித்துள்ளதால், ஓபிஎஸ்-ஆல் எதுவுமே கேட்க முடியாமல் போய்விட்டது. ஆக.. எந்த ஒரு சின்ன விஷயம் என்றாலும் சரி, தேர்தலை சந்திப்பது என்றாலும் சரி.. எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான்கள் ஒர்க் அவுட் ஆகி வருவதுடன், ஓபிஎஸ்-ன் பிடியும் தளர்ந்து கொண்டே வருகிறதாக கூறப்படுகிறது.

    English summary
    CM Edapadi Palanisamys is said to be rising above Dy CM O Panneerselvam in AIADMK
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X