போற இடமெல்லாம் 6 அடின்னு பேசாதீங்க.. கருணாநிதியை களங்கப்படுத்தாதீங்க.. ஸ்டாலினுக்கு முதல்வர் கொட்டு!
சென்னை: கருணாநிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஸ்டாலின் நடந்து கொள்ள வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சூலூர் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது திறந்த வேனில் இருந்தபடியே பேசுகையில் தமிழகம் முழுவதும் சிறு, குறு, விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட 65 ரூபாய் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.

நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் வீடு கட்ட வாங்கிய கடனும் தள்ளுபடி செய்யப்படும். மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக தந்தை என்றும் பாராமல் அவரது மரணம் குறித்து ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார்.
அவர்கள் மெரினாவில் 6 அடி நிலம் கேட்டனர். நாங்கள் காமராஜர் சமாதி அருகே 2 ஏக்கர் நிலம் தருவதாக அறிவித்தோம். ஆனால் தற்போது 6 அடி இடம் தரவில்லை என செல்லும் இடங்களில் எல்லாம் விமர்சனம் செய்து வருகிறார்.
இது கருணாநிதியின் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாகும். எனவே அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும்படி நடந்து கொள்ள வேண்டாம் என ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications