வாக்கு வங்கின்னு ஒன்னு இருக்குல்ல.. தேமுதிகவுக்கு என்ன தகுதி இருக்கு? விளாசிய முதல்வர் எடப்பாடியார்!
சென்னை: பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையிலான தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுக்க அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேறியது. உரிய எண்ணிக்கையிலான தொகுதிகளை கொடுக்கவில்லை என்பதால் வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் ஒரு கூட்டணி அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல, ஒரே தொகுதியை பல கூட்டணி கட்சிகள் கேட்பார்கள். இதையெல்லாம் பேசி ஆலோசனை செய்துதான் முடிவு எடுப்போம்.

சம்பவம்
புதிய தமிழகம் கூட்டணியில் எங்களுடன் இல்லை. அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதால் நிச்சயமாக இழப்பு என்பதே கிடையாது. தேமுதிக பக்குவம் இல்லாத அரசியல்வாதிகளாக உள்ளார்கள். கூட்டணி என்பது அவ்வப்போது ஏற்படுகிற ஒரு சம்பவம்.

தேமுதிக
கூட்டணியில் இருந்து வெளியேறியவுடன் இப்படியெல்லாம் பேசுவது சரியில்லை. அது கூட்டணிக்கும் அழகல்ல. ஒரு கட்சி கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் தனியாக போவது தவறில்லை. ஆனால் ஒரு கட்சி மீது பழி சுமத்துவது தவறு. நானே போய் அவர்களிடம் பேசினேன் என்றார். அப்போது செய்தியாளர்கள் பாமகவுக்கு கொடுத்த மரியாதையை இவர்களுக்கு கொடுக்கவில்லை என தேமுதிக குற்றம்சாட்டுகிறார்கள்.

கூட்டணி கட்சி
இதுகுறித்து முதல்வர் கூறுகையில் அதெப்படி கொடுக்க முடியும்? அந்தந்த கட்சிகளுக்கென தகுதி இருக்கிறது இல்லையா? வாக்கு வங்கி என ஒன்று இருக்கிறது. அதை வைத்துதான் தொகுதிகள் வழங்கப்படுகிறது. இதற்கேற்பதான் பேச்சுவார்த்தையில் கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டது.

தேர்தல் அறிக்கை
திமுக எங்கே முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. மக்கள் என்ன எண்ணுகிறார்களோ அதை அறிவிப்புகளாகவே நடைமுறைப்படுத்திய அரசாங்கம் அதிமுக. விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்து உடனே அமல்படுத்திய கட்சி அதிமுக என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications