"தங்கள் தாய்க்கும் அவரை போல்".. ட்விட்டரில் வந்த வீடியோவுக்கு பதில் கூறிய தமிழக முதல்வர்
சென்னை: தூத்துக்குடியில் இலவசமாக முகக் கவசங்களை வழங்கிய பெண்ணுக்கு ட்விட்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட்டரில் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார். அந்த ட்விட்டரை ஆக்கப்பூர்வமாகவும் பயன்படுத்தி வருகிறார். அரசின் அறிவிக்கைகள், அறிவுரைகளை அவ்வப்போது ட்விட்டரில் பதிவேற்றம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தூத்துக்குடியில் ஒரு பெண் இலவசமாக போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் முக கவசத்தை விநியோகித்துள்ளார்.
இதை அந்த பெண்ணின் மகன் நவபாலன் என்பவர் அதை வீடியோவாக எடுத்து செய்தி சேனல்களுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.
தங்கள் தாய்க்கும், அவரைப்போல் கொரோனாவை எதிர்க்க அரசோடு சேர்ந்து தங்களால் இயன்ற முயற்சிகளை மனிதநேயத்துடன் மேற்கொண்டு வரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள்! https://t.co/P8WGVurfd4
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 7, 2020
அவர் கூறுகையில் தங்கள் தாய்க்கும், அவரைப்போல் கொரோனாவை எதிர்க்க அரசோடு சேர்ந்து தங்களால் இயன்ற முயற்சிகளை மனிதநேயத்துடன் மேற்கொண்டு வரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள்! என தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் வந்த ஒரு வீடியோவுக்கு முதல்வர் பதில் அளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications