7 பேர் விடுதலையில் இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்.. சட்டசபையில் முதல்வர் பேச்சு
சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானம் குறித்து இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் சட்டத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது 7 பேர் விடுதலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் 7 பேரில் ஒருவரை (நளினி) மட்டுமாவது விடுதலை செய்ய வேண்டும். என கேட்டார். இதற்கு பதிலளித்த முதல்வர் பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரே முடிவெடுக்க வேண்டும். தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது என்றார் முதல்வர்.
அப்போது துரைமுருகன் பேசுகையில் ஆளுநரை தனிப்பட்ட முறையில் சந்தித்து வலியுறுத்தினீர்களா. தீர்மானத்தை அனுப்பிவிட்டு அமைதியாக இருக்கிறீர்கள். எங்கள் ஆட்சியில் கிடைக்காத வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
அதற்கு முதல்வர் எங்கள் வேலையை நாங்கள் சரியாக செய்துள்ளோம். சட்டம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவரை மட்டும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்றார் முதல்வர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications