விநாயகர் சதுர்த்தி: “மக்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றிப் பாதையில் பயணிக்கட்டும்" - விஜய் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 36,000 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படவுள்ளது. மேலும், சென்னையில் மட்டும் 1,562 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

Vijay Ganesh chaturthi spirituality

கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, சேலம், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏதுவாக, அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொண்டு தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், "விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்! மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் விஜய், அனைத்து பண்டிகைகளுக்கும் மக்களுக்கு வாழ்த்துச் சொல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து தெரிவித்த விஜய், தற்போது விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+