அன்று செங்கோட்டையன்! இன்று யார் கூட தெரியுமா? என்னாச்சு விஜய்க்கு! இடத்தை மாற்றிகிட்டே இருக்காரே
சென்னை: தமிழக சட்டசபையில் அன்று செங்கோட்டையனுடன் அமர்ந்த முதல்வர் விஜய், இன்றைய தினம் ஆதவ் அர்ஜுனாவுடன் அமர்ந்து அவருடன் பேசிக் கொண்டே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை கவனித்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கியது. அடுத்த நாள் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்து மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. சட்டசபை வரும் 8ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

20 நாட்களுக்கு மேலாக நடந்து வரும் கூட்டத் தொடரில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. வார விடுமுறைக்கு பிறகு இன்றைய கூட்டத் தொடரில் மாற்றுத்திறனளாளிகள் நலத்துறை, வேளாண்மை, மதுவிலக்கு, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.
2027-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும். விலையில்லா வேட்டி, சேலை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானமும் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.
அப்போது முதல்வர் விஜய், அவருக்கான பிரத்யேக இருக்கையை தவிர்த்துவிட்டு அமைச்சர்களுடன் அமர்ந்து ஆலோசனை நடத்தி விவாதத்தை கவனித்தார். நீர்வளத் துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் இருக்கையில் அமர்ந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் விவாதித்து சபை நடவடிக்கையை கவனித்தார். இது சட்டசபையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
இதே போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செங்கோட்டையனுடன் முதல்வர் விஜய் அமர்ந்து தீவிர ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது அருண்ராஜின் இடத்தில் அமர்ந்திருந்தார்.
தமிழக சட்டசபையில் வியாழக்கிழமை சிறுபான்மைத் துறை, சமூகநீதித் துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்றது.
கடந்த 27 ஆம் தேதி பிற்பகலுக்கு பிறகு, சட்டசபைக்கு வந்த முதல்வர் விஜய், நேராக அவரது இருக்கைக்கு போகாமல் அமைச்சர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்திருந்தார். அவர் அமைச்சர்கள் ஆதவ் மற்றும் செங்கோட்டையனுக்கு இடையே அமர்ந்திருந்தார்.
அதாவது அமைச்சர் அருண்ராஜின் இருக்கையில் அமர்ந்திருந்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையனுடன் தீவிர ஆலோசனையில் இருந்தார். என்ன பேசிக் கொண்டிருந்தார் என்பது தெரியவில்லை.
ஆனால் முதல்வர் இருக்கையை விட்டுவிட்டு அமைச்சர் இருக்கையில் ஒரு முதல்வர் அமர்ந்தது இதுவே முதல்முறையாகும். பொதுவாக சபாநாயகர் இருக்கைக்கு தனி இருக்கை இருக்கும். அது போல் முதல்வருக்கென தனி சிறப்பு இருக்கை அமைக்கப்படும்.
முதல்வரின் இருக்கைக்கு அடுத்து மூப்பு அடிப்படையில் அமைச்சர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். அது போல் 234 சட்டசபை உறுப்பினர்களுக்கும் அவரது பெயர் அகர வரிசைபடியின் சீனியாரிட்டி படியும் அமர வைக்கப்படுவர். ஒரு பக்கம் ஆளும் கட்சி, அவரது கூட்டணி கட்சியினர், மறுபக்கம் எதிர்க்கட்சியினர் அமர்ந்திருப்பர்.
சட்டசபை உறுப்பினர்கள் விவாதத்தின் போது பேசுவதற்காக தற்காலிகமாக இருக்கையை மாற்றுவது உண்டு. ஆனால் ஒரு முதல்வர் தனது தனி நாற்காலியை விட்டு சபை முடியும் வரை அமைச்சர்களுடன் இணைந்து அமர்வது இதுவே முதல்முறை!
அப்படி செங்கோட்டையனுடன் அவர் என்ன பேசிக் கொண்டிருந்தார் என்பது குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. ஒரு வேளை நேற்று அவையில் நடந்த பிரச்சினை குறித்து கேட்டறிந்தாரா, இல்லை வேறு துறை ரீதியாக ஏதாவது பேசியிருந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
முதல்வர் விஜய் எப்போது எளிமையை விரும்புவார் என அவரது கட்சியினர் கூறி வருகிறார்கள். அந்த வகையில் அவர் அமைச்சருடன் அமர்ந்தாரா என தெரியவில்லை. செங்கோட்டையனுடன் பேச வேண்டும் என்றால் தனது அறைக்கு அழைத்துக் கூட பேசியிருக்கலாம். அந்த வகையில் இன்றைய தினம் ஆதவ் அர்ஜுனாவுடன் விஜய் அமர்ந்திருந்தார்.


Click it and Unblock the Notifications
