சட்டசபையில் எழுந்து நின்ற எம்எல்ஏக்கள்! சபாநாயகர் டென்ஷன்! உற்று பார்த்த முதல்வர் விஜய்
சென்னை: தமிழக சட்டசபையில் எம்எல்ஏக்கள் எப்படி இருக்க வேண்டும் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதை முதல்வர் விஜய் உற்று பார்த்துக் கொண்டிருந்தார்.
2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு, தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. இந்த நிலையில் பால் கொள்முதல் விலையை மேலும் ரூ 3 உயர்த்தி, ரூ 44 ஆக வழங்கப்படும் என தமிழக சட்டசபை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் விஜய் அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: பால் உற்பத்தி, கிராம பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதை கருத்தில் கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ரூ 3 லிருந்து 5 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்து ஆக மொத்தம் ஒரு லிட்டர் கொள்முதல் விலை ரூ 38 லிருந்து ரூ 41 உயர்த்தி கடந்த 19ஆம் தேதி சட்டசபையில் அறிவித்தோம்.
இந்தச் சூழ்நிலையில் கறவை மாடுகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு ஆகியவற்றின் விலை, இதர இடுபொருள்களின் விலை ஆகியவை மிகவும் உயர்ந்துள்ளதைத் தெரிவித்து, பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தித் தர வேண்டும் என பல்வேறு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்குக் கோரிக்கையை வைத்துள்ளனர் என கூறியிருந்தார்.
அந்த நிலையில் பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய்யின் உரைக்கு பிறகு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் பேச முயன்றனர். அதற்கு அனுமதியளிக்க மறுத்த சபாநாயகர். 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட பிறகு எந்த கேள்வியும் கேட்க முடியாது. தெளிவு உரைகளுக்கும் எந்த இடமும் இல்லை என்றார்.
பேரவை நடவடிக்கைகள் நேரலை செய்யப்படுவதால் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படும் பகுதிகள் கூட சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாகவும் ரீல்ஸ்களாகவும் உலை வருகிறது என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சுட்டிக் காட்டினார். இது அவையின் உரிமையை மீறும் செயல் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர், நான் திண்டுக்கல்லில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்போது சில இளைஞர்கள் என்னிடம் வந்து சட்டசபை நேரலையை நாங்கள் பார்த்துக வருகிறோம். அதில் எம்எல்ஏ, அமைச்சர்கள் எப்படி செயல்பட வேண்டும், அரசியல் என்றால் என்ன என்பதையும் நாங்கள் தெரிந்துக் கொண்டிருக்கிறோம். எங்களுக்கு அரசியல் பின்னணி ஏதும் இல்லை. ஆனாலும் அரசியல் குறித்து அறியும் வகையில் நேரலை பயனுள்ளதாக இருக்கிறது என்றனர்.
அப்போது இன்னொரு நபர் என்னிடம் வந்து, உறுப்பினர்கள் பேசுவது அவைக் குறிப்பில் இருந்து நீக்கிவிடுகிறீர்கள். ஆனாலும் அவை ரீல்ஸ்ஸாக போய்விடுகிறது. ஏன் ஒரு உறுப்பினர் பேசும் போதே அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லாத வகையில் கண்ணியத்துடன் பேச கூடாதா? என கேட்டார்.
அவர் கேட்டது சரியான கேள்வி. உறுப்பினர்கள், அமைச்சர்கள் பேசும் போதே அவைக் குறிப்பில் இருந்து நீக்காத வண்ணம் கண்ணியத்துடன் பேச வேண்டும். உரிமைக் குழு அமைக்கப்பட்ட பிறகு இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
அது போல் அவையில் சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க ஒரே நேரத்தில் பல உறுப்பினர்கள் எழுந்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு அந்தந்தக் கட்சியின் கொறடாகளுக்கே உண்டு. ஒரு கட்சியின் கொறடா எழுந்து நின்றால் அவரது கட்சி உறுப்பினர்கள் எழுந்து பேசக் கூடாது. அன்று அரசு கொறடா என் இருக்கையை நோக்கி வந்த போது கூட நான் அவரை வர வேண்டாம் என சொல்லியிருந்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது திமுக கொறடா எ.வ.வேலு பேசுகையில், உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்தால்தான் தவறு. சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பதற்கு கைகளை உயர்த்தலாம், குரல் கொடுக்கலாம் என கூறினார்.
உடனே குறுக்கிட்ட சபாநாயகர், எனது கவனத்தை ஈர்க்க கைகளை உயர்த்தலாம், குரல் கொடுக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் 10, 15 பேர் எழுந்து அவரை பேச அழையுங்கள், இவரை பேச அழையுங்கள் என எதற்காக அடுத்தவருக்கு பரிந்துரை செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் சபாநாயகர் டென்ஷனாக பேசியிருந்த நிலையில் அவரை முதல்வர் விஜய் உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார்.


Click it and Unblock the Notifications
