இன்று முதல் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாம்- முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
சென்னை: தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 2021-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுகவின் மகளிருக்கு ரூ1,000 உதவித் தொகை திட்டம் எனும் வாக்குறுதி பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு எப்போது செயல்படுத்தும் என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வியாக இருந்தது. தமிழ்நாடு அரசு பல்வேறு சூழ்நிலைகளை ஆராய்ந்து வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்; இத்திட்டத்துக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனவும் பெயரிட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறும் தகுதியானவர்கள் குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதற்கான விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. கடந்த 7-ந் தேதி இத்திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இத்திட்டத்தின் கீழ்
1 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் மாதம் ரூ1,000 நேரடியாக செலுத்தப்படும். இதற்காக ரூ7,000 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை பதிவு செய்வதற்காக மொத்தம் 35,923 முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications