ஆஹா.. இது லிஸ்ட்லயே இல்லையே.. மாஜி பாஜக புள்ளியை சட்டென பார்த்த ஸ்டாலின்.. ஒரே குழப்பம்!
சென்னை: பாஜகவில் இருந்த முக்கிய தலைவர் ஒருவரை முதல்வர் ஸ்டாலின் திடீரென சந்தித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பான சூழ்நிலைகள் நிலவி வருகின்றன. ஒரு பக்கம் அதிமுகவில் உட்கட்சி மோதல் நடந்து கொண்டு இருக்கிறது.
பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு மீது இன்று தீர்ப்பும் வழங்கப்பட உள்ளது.

மோதல்
இன்னொரு பக்கம் அதிமுக - பாஜக இடையிலும் மோதல் நிலவி வருகிறது. அதன்படி சிடி நிர்மல் குமார் பாஜகவில் இருந்து அதிமுகவில் இணைந்ததற்கு எதிராக பாஜக நிர்வாகிகள் கொதித்து போய் உள்ளனர். இதனால் அதிமுக பாஜக இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்து உள்ளது. இரண்டு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டு வருகின்றன.இந்த மோதலின் உச்ச கட்டமாக அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பாஜக தலைவர் பதவியில் இருந்தே ராஜினாமா செய்வேன் என்று கூறி உள்ளாராம் அண்ணாமலை.

டெல்லி பயணம்
அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக சொல்லப்படும் நிலையில்தான் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் அவர் முக்கியமான சில விஷயங்களை பாஜக மூத்த தலைவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசி இருக்கிறாராம். பாஜக உட்கட்சி மோதல் குறித்தும் அண்ணாமலை பேசியதாக கூறப்படுகிறது. பாஜக உள்ளே இருக்கும் சீனியர்கள் பலர் அண்ணாமலை மீது அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாஜகவிற்கு உள்ளே சீனியர்கள் vs ஜூனியர்கள் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.

ஸ்டாலின்
இந்த அரசியல் மோதல்கள், பரபரப்புக்கு இடையில்தான் பாஜகவில் இருந்த முக்கிய தலைவர் ஒருவரை முதல்வர் ஸ்டாலின் திடீரென சந்தித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதன்படி பாஜகவில் மூத்த தலைவராக இருந்த கே டி ராகவன் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டார். வீடியோ விவகாரம் காரணமாக அவர் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில், தற்போது அரசியலில் சைலண்டாக இருக்கிறார். அவர் பெரும்பாலும் பொது இடங்களுக்கும் வருவது இல்லை. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் திடீரென கேடி ராகவனை சந்தித்து உள்ளார்.

கேடி ராகவன்
அதன்படி கேடி ராகவன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக எம்பி கனிமொழியின் கணவர் அரவிந்தனும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்க்க சென்ற முதல்வர் ஸ்டாலின் கே டி ராகவனையும் நேரில் சென்று சந்தித்தார். கே டி ராகவன் பல முறை முதல்வர் ஸ்டாலினை மிக கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். மிக கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார். அவரைத்தான் முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து பேசி இருக்கிறார். அவரின் இந்த செயல் பாஜகவினர் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கே டி ராகவன் பாஜகவில் இல்லை என்றாலும் மத்திய பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கிறார். அவர்களுடன் நல்ல தொடர்பில் இருக்கிறார். இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் திடீரென கேடி ராகவனை சந்தித்து பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications