காரில் ஏறாமல்.. நடந்தபடி வந்த முதல்வர் ஸ்டாலின்.. தனிப்பிரிவில் திடீரென ஆய்வு.. சுவாரசிய சம்பவம்!
சென்னை: தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவு அமைந்து உள்ளது. மக்கள் முக்கிய புகார்களை, கோரிக்கைகளை முதல்வரின் தனிப்பிரிவில் வழங்குவது வழக்கம். இதற்கு துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும், சமயங்களில் குறிப்பிட்ட மாவட்ட காவல் நிலையங்களுக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று சோதிக்கப்படும்.
சென்னையில் சமீப நாட்களாக இப்படி அதிக அளவில் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

ஆய்வு
இந்த நிலையில்தான் இன்று திடீரென முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இன்று சாதாரண அலுவல் பணிகளுக்கு தலைமை செயலகம் வந்தவர் அங்கு சில கூட்டங்களில் கலந்து கொண்டார். பின்னர் திடீரென எதிர்பார்க்காமல் அங்கிருந்து தனிப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தார்.

மீட்டிங்
தலைமை செயலக மீட்டிங் முடிந்த பின் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்வதாகவே இருந்தது. ஆனால் காரில் ஏறுவதற்கு முன் திடீரென திரும்பிய முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்திற்கு வந்தார். தலைமை செயலாளர் இறையன்புவுடன் நடந்தே முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தின் இன்னொரு பக்கத்தில் இருக்கும் முதல்வரின் தனிப்பிரிவிற்கு வந்தார்.

பொதுமக்கள்
அங்கு முதல்வரின் தனிப்பிரிவில் உள்ள அதிகாரிகளிடம் முதல்வர் ஸ்டாலின் விசாரணை நடத்தினார். என்னென்ன புகார்கள் வந்து இருக்கின்றன. புகார்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா? என்று கேட்டறிந்தார். அதேபோல் அங்கு வந்த பொது மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேள்வி கேட்டார்.

மக்கள் கோரிக்கை
கோரிக்கை வைக்க வந்த மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களின் மனுக்களை வாங்கி படித்தார். 5-8 பேரிடம் முதல்வர் ஸ்டாலின் தனியாக நேரில் பேசினார். இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண்போம். கவலையடைய வேண்டாம்.. உங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுங்கள் என்று குறிப்பிட்டார். சுமார் 10 நிமிடங்கள் அங்கு முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். முதல்வரின் இந்த ஆய்வால் தனிப்பிரிவு அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications