என் குடும்பத்தினருக்கு தமிழில் பெயர்.. எனக்கு மட்டுமே காரண பெயர்.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உங்கள் பிள்ளைகளுக்கு அழகான தமிழ்ப் பெயர் வையுங்கள் என மணமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்ட பூச்சி முருகனின் மகளுக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் எனக்கு பூச்சி முருகனை மிகவும் பிடிக்கும். நான் அவரை முருகன் என்றே அழைப்பேன். ஏனென்றால், முருகன் மீது எனக்கு அன்பு, பாசம் உள்ளது.

முதல் மாநிலம்

முதல் மாநிலம்

முதல் முதல்வர் என்பதை முதல் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதில்தான் எனக்கு பெருமை. எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தமிழ் பெயர் தான், எனக்கு மட்டுமே காரண பெயர். எனக்கு அய்யாதுரை என பெயர் வைக்க கருணாநிதி விரும்பினார். அய்யா என்பது தந்தை பெரியாரை குறிக்கும். துரை என்பது அண்ணாதுரையின் பெயரில் உள்ள துரையாகும். ஆனால் சோவியத் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் இரங்கல் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொண்ட போது அவருக்கு ஒரு துண்டு சீட்டை ஒருவர் கொடுத்தார்.

ஸ்டாலின் பெயர் ஏன்

ஸ்டாலின் பெயர் ஏன்

அதில் "உங்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான்" என எழுதியிருந்தது. அப்போதே "எனது மகனுக்கு ஸ்டாலின் என பெயர் வைப்பதாக" கருணாநிதி அந்த கூட்டத்திலேயே அறிவித்தார். உங்கள் பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள். என மணமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழரசு

தமிழரசு

முதல்வர் ஸ்டாலினின் மகன் பெயர் உதயநிதி, மகளின் பெயர் செந்தாமரை, பேரன் பெயர் இன்பநிதி. அவருடைய சகோதரிகள் பெயர் கனிமொழி, செல்வி, சகோதரர்களின் பெயர்கள் தமிழரசு, மு.க. முத்து, மு.க. அழகிரி. இதில் கனிமொழியின் மகன் பெயர் ஆதித்யா. மு.க. அழகிரியின் மகன் பெயர் தயாநிதி அழகிரி, மகள் பெயர் கயல்விழி. அது போல் தமிழரசுவின் மகன் பெயர் அருள்நிதி, அவரது மகன் பெயர் மகிழன்.

பிறக்கும் குழந்தைகள்

பிறக்கும் குழந்தைகள்

அது போல் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாமா பெயர் முரசொலி மாறன், அவரது மகன்கள் தயாநிதி மாறன், கலாநிதி மாறன். இப்படி முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள் தமிழில்தான் இருக்கின்றன. இந்த பெயர்களை முன்னாள் முதல்வர் கருணாநிதிதான் வைத்தார். அவரது வீட்டில் நடக்கும் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தும் பிறக்கும் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதும் செய்து வந்தார்.

தமிழ் பெயர்கள்

தமிழ் பெயர்கள்

முதல்வர் ஸ்டாலினின் குடும்பத்தில் அனைவருக்கும் தமிழ் பெயர்கள், ஆனால் தனக்கு மட்டும் காரண பெயர் என அவர் குறிப்பிட்டுள்ளது குறித்து பார்ப்போம். சோவியத் ரஷ்யாவின் அதிபராக விளங்கிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான ஸ்டாலின் மறைந்த நேரத்தில் இவர் பிறந்ததால் கருணாநிதி அந்த பெயரையே தனது மகனுக்கு வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+