68 வயசு மாதிரியா தெரியுது.. நம்ம முதல்வர்தான்.. செம ஸ்பீடான ஒர்க் அவுட்.. 3 வீடியோக்கள் வெளியீடு
முதல்வர் ஸ்டாலின் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன
சென்னை: யாருன்னு பார்த்தீங்களா.. நம்ம முதல்வர்தான்.. காலையிலேயே 3 வீடியோக்களை போட்டு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு டஃப் தந்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலினின் உடற்பயிற்சி வீடியோக்கள் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறது.
Recommended Video
இந்தியாவில் மற்ற எந்த மாநில முதல்வர்களை விடவும், நம் தமிழக முதல்வர் உடல்நலனிலும், உடற்பயிற்சிக்கும் அதிக அக்கறை எடுத்து வருபவர்.
என்னதான் அரசியல் சூழலில் பரபரப்பாக இருந்தாலும் சரி, தினமும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்...

சந்திப்பு
தேர்தல் பிரச்சாரங்களுக்கே சென்றாலும் சரி, எந்த ஊருக்கு போகிறாரோ, அந்த ஊரில் விடிகாலை நேரங்களில் வாக்கிங், ஜாக்கிங் செய்து கொண்டிருப்பார் ஸ்டாலின். சமீப காலமாக சைக்கிள் ஓட்டுவதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளார்.. இப்படி சைக்கிள் பயணத்தின்போதும், வாக்கிங், ஜாக்கிங்கின்போதும் அதற்கேற்ற உடைகளை அணிந்து, கையில் கிளவுஸூடன், முகத்தில் மாஸ்க்குடன் மக்களையும் நேரடியாக சந்தித்து பேசுகிறார்..

உடற்பயிற்சி
அவர்களையும் இதுபோல உற்சாகப்படுத்துகிறார்... தன்னுடைய உடற்பயிற்சியையும், மக்களுக்கான விழிப்புணர்ச்சியாக மாற்றி காட்டுகிறார்.. அதற்காகத்தான் தொடர்ந்து, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு மக்களையும் அவ்வாறு செய்யும்படி தூண்டுகிறார். இப்போதும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய வீட்டிலேயே ஒரு ஜிம் வைத்துள்ளார்..

3 வீடியோக்கள்
இந்த உடற்பயிற்சி கூடத்தில் ஏராளமான நவீன உபகரணங்கள் உள்ளன.. இந்த ஜிம்மிலேயே ஒரு டிவியும் உள்ளது.. காலை நேரத்தில் டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டே உடற்பயிற்சிகளை செய்வது இவரது வழக்கம்.. இப்போதும் அதே ஜிம்மில் உடற்பயிற்சி செய்து அந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.. 3 வகையான ஒர்க்அவுட்களை செய்துள்ளார் முதல்வர்.. அந்த 3 வீடியோக்களையுமே ஷேர் செய்துள்ளர்.. 68 வயசு என்றால் யாருமே நம்ப மாட்டார்கள்..

புதிய வீடியோக்கள்
அதே ஸ்மார்ட் லுக்குடன், படுவேகமாக ஒர்க் அவுட் செய்கிறார்.. இதெல்லாம் பார்த்தால், புதிதாக பயிற்சி எடுத்தது போல தெரியவில்லை.. பல காலம் தன்னுடைய உடல்நலனில் காட்டிய அக்கறைதான், நீண்ட அனுபவம் கொண்டவராக வீடியோவில் பார்க்க முடிகிறது.. வழக்கம்போல், இந்த வீடியோவும் வீடியோக்கள் கலக்கோ கலக்கு என்று கலக்கி கொண்டிருக்கின்றன.. இந்த அளவுக்கு இந்தியாவிலேயே வேறு எந்த முதல்வராவது உடல்நலனில் அதீத அக்கறை கொண்டு, விழிப்புணர்வு தந்து கொண்டிருக்கிறார்களா என்றால், இல்லை என்றே நாம் அடித்து சொல்லலாம்!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications