மாணவர்களுக்கு கொரோனா பரவல்.. இன்று அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வார காலத்திற்குள் நிறைய மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அது போல் ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. எத்தனை பாதுகாப்பு நடைமுறைகள் எடுத்த போதிலும் இது போல் கொரோனா பரவியது ஏன் என்பது குறித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். பள்ளிகளில் ரேண்டம் முறையில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்துவதில் சிலருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தொற்று குறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மகாராஷ்டிராவில் மூன்றாவது அலை குறித்த கேஸ்கள் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
மாணவர்களுக்கு ஏற்படும் கொரோனா பரவலை தடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மொத்தத்தில் இரண்டாவது அலையை போல் மூன்றாவது அலை வேகமாக பரவாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications