முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம்.. ஆ ராசாவுக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர், துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 இடங்களையும் கைப்பற்றியது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் திமுகவினர் 21 பேரும், கொமதேகவில் ஒருவரும் போட்டியிட்டனர். இந்த 22 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

lok sabha election result DMK MK Stalin

திமுக சார்பில் களம் இறங்கிய டி.ஆர்.பாலு (ஸ்ரீபெரும்புதூர்), எஸ்.ஜெகத்ரட்சகன் (அரக்கோணம்), கனிமொழி (தூத்துக்குடி), ஆ.ராசா (நீலகிரி), தயாநிதிமாறன் (மத்தியசென்னை), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), டி.எம்.செல்வகணபதி (சேலம்), ஆ.மணி (தர்மபுரி), தரணிவேந்தன் (ஆரணி), மலையரசன் (கள்ளக்குறிச்சி), செல்வம் (காஞ்சீபுரம்), கதிர் ஆனந்த் (வேலூர்), பிரகாஷ் (ஈரோடு), கணபதி ராஜ்குமார் (கோவை), ஈஸ்வரசாமி (பொள்ளாச்சி), அருண் நேரு (பெரம்பலூர்), முரசொலி (தஞ்சை), தங்க தமிழ்ச்செல்வன் (தேனி), தமிழச்சி தங்கபாண்டியன் (தென்சென்னை), டாக்டர் கலாநிதி வீராசாமி (வடசென்னை), டாக்டர் ராணி ஸ்ரீகுமார் (தென்காசி) ஆகிய 21 வேட்பாளர்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றார்கள்.

இந்த தேர்தலில் கடந்த முறை எம்பியாக இருந்த 10 பேர் மற்றும் புதுமுகங்கள் 11 பேர் என வெற்றி பெற்ற திமுக எம்பிக்கள் 21 பேரும் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் சந்தித்து, வெற்றி சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.

இதனிடையே திமுக எம்.பி.க்கள் ஆலோசனை கூட்டம் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருந்தார். அந்த அறிக்கையில் அவர் கூறுகையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்.பி.க்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக புதிய எம்.பி.க்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். என குறிப்பிட்டிருந்தார்.

இந்த கூட்டத்தில், திமுக நாடாளுமன்ற குழு தலைவர், துணை தலைவர், பொருளாளர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறதாம். திமுக நாடாளுமன்ற குழு தலைவராக டி.ஆர்.பாலு, துணைத் தலைவராக கனிமொழி, கொறடாவாக ஆ.ராசா ஆகியோர் ஏற்கனவே இருந்திருக்கிறார்கள்.. அந்த வகையில் மீண்டும் அவர்களே இந்த பதவிகளுக்கு நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக நாடாளுமன்ற குழு பொருளாளர் பதவியில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இருந்தார்.. இந்த தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்டாத நிலையில், பொருளாளர் பதவிக்கான பரிசீலனையில் ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன் ஆகியோரது பெயர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டு நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரனும் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாம். இந்த முறை திமுகவில் லோக்சபா பலம் 22 ஆக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+