தமிழ்நாட்டில் மறுபடியும் லாக்டவுனா?.. கட்டுப்பாடுகளா?.. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!
ஸ்டாலின் லாக்டவுன் நீட்டிப்பது குறித்து நாளை ஆலோசனை நடத்துகிறார்
சென்னை: தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ம் தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில் இன்ற காலை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதையடுத்து, தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்த நிலையில், பாதிப்பானது 2,000-க்கும் கீழே குறைந்தது.. எனினும், சென்னை, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் தொற்று குறையாமல் இருந்தது.. இங்கும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை கையில் எடுத்ததையடுத்து, கொரோனா பரவல் குறைந்து வருகிறது.

கேரளா
3வது அலை பரவல் இந்தியாவுக்கு வர உள்ளதால், எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத்துறையும், வல்லுநர்களும் அலர்ட் செய்து வருகிறார்கள்.. கடந்த மாதமே 3வது அலை பரவல் பாதிப்பு கேரளாவுக்கு அதிகம் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருகின்றன.. 3வது அலை பரவலால் கோவைக்குதான் அதிக பாதிப்பும் உள்ளதாக கூறப்பட்டுள்ளன.. எனவே, தமிழகத்தில் லாக்டவுன் போடுவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதா என்ற சந்தேகமும் நீடித்து கொண்டிருக்கிறது.

வீடியோ
கொரோனா அனைவரது வாழ்க்கையையும் முடக்கிப்போட்டிருக்கும் காலகட்டத்தில், இதிலிருந்து மீள பொதுமக்கள் ஒத்துழைப்புக்கொடுத்து விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்... அலட்சியம் வேண்டாம்; எச்சரிக்கையாக இருப்போம்.. மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நிர்பந்தித்திட வேண்டாம் என்று கடுமையாகவே சொல்கிறேன்" என்று எச்சரித்திருந்தார்.

கட்டுப்பாடுகள்
இந்நிலையில், தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது வரும் 23-ம் தேதி காலை காலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது... எனவே, ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடக்க உள்ளது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், பல்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
Recommended Video

விவரங்கள்
3வது அலை முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.. எனவே, மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா, அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா என்பது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும்..!
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications