அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் படம் மிஸ்ஸிங்..அதிமுக, பாஜகவுக்கு முன்வரிசை! கோவையில் என்ன நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோவையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவில் பாஜக, அதிமுக எம்எல்ஏக்களுக்கு முன் வரிசையில் இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு பின்வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Chennai-ஐ போல கோவைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின்

    கோவையில் வ உ சி மைதானத்தில் 15 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ 89.73 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்க இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். இங்கு விழா மேடைக்கான ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

    இன்று காலை விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவை சென்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இவரது வருகையையொட்டி #KovaiWelcomesStalin மற்றும் #GobackStalin ஆகிய இரு ஹேஷ்டேக்குகள் டிரென்டாகி வருகின்றன.

    ஸ்டாலின் படம்

    ஸ்டாலின் படம்

    இந்த நிலையில் வஉசி மைதானத்தில் ஏற்படுத்தப்பட்ட விழா மேடையில் முதல்வர் மு.க. ஸ்டாலினின் படம் கூட இல்லாமல் உள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. அது போல் இந்த விழாவில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு பின்வரிசையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

    பேனர்கள் இல்லை

    பேனர்கள் இல்லை

    ஆனால் எதிர்க்கட்சிகளான பாஜக , அதிமுக எம்எல்ஏக்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அது போல் மக்களுக்கு இன்னலை கொடுக்கும் வழிநெடுக பேனர்கள், புகைப்பட பேனர்களும் இல்லை. இதுவும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    பன்வாரிலால் புரோஹித்

    பன்வாரிலால் புரோஹித்

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற விழாவுக்கு பிறகு முதல்வருக்கும் புதிய அமைச்சரவைக்கும் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் தேனீர் விருந்து அளித்தார். அந்த விருந்தில் நடுவில் ஆளுநர் அவருக்கு வலப்பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், இடப்பக்கத்தில் அமைச்சர் துரைமுருகன், அவருக்கு பக்கத்தில் ஓபிஎஸ், முதல்வருக்கு பக்கத்தில் கடந்த ஆட்சியில் சபாநாயகராக தனபால் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இதுதான் ஆரோக்கியமான அரசியல் என புகைப்படம் வைரலானது.

    முன் வரிசைக்கு அழைத்த கனிமொழி

    முன் வரிசைக்கு அழைத்த கனிமொழி

    அது போல் தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பதவியேற்பு விழாவில் 8 ஆவது வரிசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆளுநர் மாளிகை விழா என்பதால் முன் வரிசைகள் ஆளுநர் மாளிகையை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பின்வரிசையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிச்சாமியையும் மத்திய அமைச்சர் எல் முருகனையும் முன்வரிசையில் அமருமாறு திமுக எம்பி கனிமொழி அழைத்தார். ஆனால் அவர்கள் அங்கேயே உட்காருவதாக கூறிவிட்டனர். அது போல் இந்த விழாவில் எதிர்க்கட்சித் தலைவரை ஆளுநருக்கு முதல்வர்தான் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். அதை முதல்வர் ஸ்டாலின் செவ்வணே செய்து முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+