அரிசியும் உழக்கும் பிரிக்கவே கூடாது..கண்டிப்பாக சொன்ன துர்கா ஸ்டாலின்..முதல்வர் வீட்டு கிச்சன் டூர்
முதல்வர் வீட்டு ஸ்டோர் ரூமில் இருந்த அரிசி ட்ரம்மில் இருந்து உழக்கை தனியாக எடுத்து வைத்திருந்ததை பார்த்த துர்கா ஸ்டாலின் அதை ஒரு போதும் பிரிக்கவே கூடாது என்று சொன்னார்.
சென்னை: நம்முடைய வீட்டில் சமையல் அறையில் அரிசியும் அதனை அளக்க பயன்படுத்தும் உழக்கையும் தனி தனியே பிரித்து வைத்திருப்போம். ஆனால் அப்படி வைக்கக்கூடாது எப்போதும் அரிசி உடனேயே உழக்கையும் சேர்த்துதான் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா. முதல்வர் வீட்டு கிச்சன் டூரில் அவர்கள் வீட்டில் என்னென்ன இருக்கிறது என்று விளக்கம் அளித்த துர்கா, தனது மாப்பிள்ளைக்கு வெந்தைய ரசம் ரொம்ப பிடிக்கும் என்று கூறினார்.
யூடுயுப் சேனல்களில் பிரபலங்களின் வீடுகளை படம் பிடித்து ஒளிபரப்புவார்கள். அதுவும் முதல்வர் ஸ்டாலின் வீட்டில் என்னென்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வமாகவே இருக்கும். முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா எளிமையானவர். கடவுள் பக்தி அதிகம், அவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் குல தெய்வ படங்களும், மறைந்த முன்னோர்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் வீட்டு சமையலறை எளிமையாகவே இருக்கிறது. மண் பாத்திரங்கள், சாதாரண கேஸ் ஸ்டவ், பிளாஸ்டிக் டப்பாக்கள், எவர்சில்வர் பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார். மீன்களை கழுவி மண் பானையில் அழகாக சமையல் செய்கிறார் துர்கா ஸ்டாலின்.

அசைவமும் சைவமும்
கணவருக்கும், மாமனாருக்கும் அசைவ உணவுகள் ரொம்பவே பிடிக்கும் என்று கூறிய துர்கா ஸ்டாலின், மீன் குழம்பை காரம் குறைவாக சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் என்று சொன்னார். மகள், மருமகன், மகன், மருமகள், பேரன், பேத்திகள் என பெரிய குடும்பம் முதல்வர் ஸ்டாலினுடையது. அவ்வப்போது விஷேச நாட்களில் ஒன்றாக இணைந்து சாப்பிடுவார்கள். அப்போது மாமியாரின் சமையலை விரும்பி சாப்பிடுவாராம் மாப்பிள்ளை சபரீசன்.

மகளுக்கு பிடித்த உணவுகள்
பெண்ணுக்கு எறா தொக்கு ரொம்ப பிடிக்கும். வீட்டிற்கு வரும்போதெல்லாம் சமைத்து கொடுப்போன் என்று சொன்னார். பேரன் பேத்திகளும் சூப்பரா இருக்கு பாட்டி என்று சாப்பிடுவார்கள் வீட்டிற்கும் எடுத்துக்கொண்டு செல்வார்கள் என்று சிரித்துக்கொண்டே சொன்னார் துர்கா. மகளுக்கு விரால் மீன் குழம்பு பிடிக்கும் என்று சொன்னார்.

மாப்பிள்ளை சபரீசன்
மாப்பிள்ளை சபரீசன் சுத்த சைவம். அத்தை செய்யும் அத்தனை சைவ உணவுகளும் ரொம்ப பிடிக்கும் என்று சொன்ன சபரீசன், குழம்பு, சாம்பார், ரசம்...அதிலும் அந்த வெந்தய ரசம் அல்டிமேட். நான் வீட்டிற்கு வரும் போது வெந்தைய ரசம் வைக்கச் சொல்லி சாப்பிடுவேன் என்று சொன்னார். இங்கே வீட்டிற்கு வருபவர்கள் கூட அத்தையிடம் அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து கொடுக்கச் சொல்வார்கள் என்றார் சபரீசன்.

அரிசியும் உழக்கும்
ஸ்டோர் ரூமில் வரிசையாக அரிசி ட்ரம்கள், பாத்திரங்களை, டப்பாக்களை காண்பித்து கொண்டே வந்தார். மிளகாய் தூள் நாங்களே வீட்டில் அரைத்துக்கொள்வோம் என்று சொன்னார். கையில் அரிசி அளக்கும் உழக்கை எடுத்த துர்கா ஸ்டாலின், எப்போதுமே அரிசியையும் உழக்கையும் தனியாக வைக்காதீங்க என்று கண்டிப்பாக சொன்னார். அரிசி எடுத்தா பிரிக்கக் கூடாது என்று சொன்னார். என்னோட ஸ்டோர் ரூம் ரொம்ப சின்னது..குட்டியாக இருக்கும் என்று சொல்லி விட்டு சிரித்தார்.

எளிமையான துர்கா ஸ்டாலின்
எனக்கு எப்போதுமே நீட்டாக அடுக்கி வைத்திருக்க வேண்டும். எனக்கு பயந்து கொண்டே அடுக்கி வைத்து விடுவார்கள் என்று சொன்னார். எனக்கு எப்போதுமே வரிசையாக அழகாக இருக்க வேண்டும். மாவுகளை அந்தந்த டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும். வரகு, சாமை, குதிரைவாலி, தினை போன்ற சிறுதானியங்களை சமைத்து சாப்பிடுவோம். இடியாப்பம் நிறைய செய்வேன். கொடம்புளி போட்டுதான் குழம்பு வைப்பேன் என்று சொன்னார். என்னதான் முதல்வரின் மனைவியாக இருந்தாலும் எளிமையான அம்மாவாகவும், பாசமான மாமியாராகவும் இருப்பதை இந்த வீடியோ மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.












Click it and Unblock the Notifications