முதல்வர் ஸ்டாலின் அடுத்த அதிரடி.. அமைச்சர்கள் தந்த வாக்குறுதிகள்.. ஒரே மாதத்தில் 2 ஆய்வு.. சபாஷ்
அமைச்சர்கள் தந்த வாக்குறுதிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என முதல்வர் கூறினார்
சென்னை: "சட்டசபையில் அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக, மாதம் 2 முறை ஆய்வு செய்வேன்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அதிமுக தரப்பு கலங்கி போயுள்ளது.
Recommended Video
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, தி.மு.க தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த 3 முக்கிய நிகழ்வுகளும் இணைந்த திமுகவின் முப்பெரும் விழா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் பெரியார் விருது - மிசா பி.மதிவாணனுக்கும், அண்ணா விருது - தேனி எல்.மூக்கையாவுக்கும், கலைஞர் விருது- கும்மிடிப்பூண்டி கி.வேணுவுக்கும், பாவேந்தர் விருது- வாசுகி ரமணனுக்கும், பேராசிரியர் விருது - பா.மு.முபாரக்குக்கும் வழங்கப்பட்டது. மேலும் ஆசிரியர் முரசொலி செல்வம் எழுதிய "முரசொலி சில நினைவலைகள்" என்ற நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

பேச்சு
விழாவில் ஸ்டாலின் பேசியதாவது: "திமுகவில் உழைத்த முன்னோடிகளுக்கு விருது வழங்கும் விழாவை, 1985ல் கருணாநிதி துவக்கினார். ஈ.வெ.ராமசாமி என்றால் சமூக நீதி... அண்ணாதுரை என்றால் மாநில உரிமை. கருணாநிதி என்றால் ஒடுக்கப்பட்டோர் உரிமை... பாவேந்தர் பாரதிதாசன் என்றால் மொழிப்பற்று. அன்பழகன் என்றால் இனமானம்.. இதுதான் இந்த கட்சியின் கொள்கை. இதை கடைப்பிடித்து தான் நாம் செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

பலன்
தமிழகத்தில் திமுக 6வது முறையாக ஆட்சி அமைத்திருக்கிறது.. க., ஆட்சி என்பது எந்த பலனும் எதிர்பார்க்காமல் உழைத்த தொண்டர்களால் விளைந்தது... உறுதிகடந்த 4 மாத ஆட்சியில், நாட்டிற்கு நாம் நல்லவர்கள், வல்லவர்கள், கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுபவர்கள், சொன்னதை செய்வர்கள் என்ற நல்ல பெயரை மக்களிடம் வாங்கியுள்ளோம்.

கொரோனா நிவாரண நிதி
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதி, பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, கொரோனா நிவாரண நிதியாக குடும்பத்திற்கு 4000 ரூபாய், நியாயவிலை கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறை சார்பில் லட்சக்கணக்கான கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.. ஒரு கால பூஜை செய்யும் பூசாரிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம், அரசு பணிகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தியது, என இவை அனைத்தும் 100 நாட்களுக்குள் நாம் செய்த சில சாதனைகள் ஆகும்.

வாக்குறுதிகள்
இப்படி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம்.. இனி ஒவ்வொரு துறைகளிலும் விடியல் பிறக்கும்... இன்னும் தமிழகத்திற்கு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்... சட்டசபையில் அமைச்சர்கள் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, துறை வாரியாக, மாதம் 2 முறை ஆய்வு பணிகளை மேற்கொள்வேன்... ஊரக உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, 60, 70 சதவீதம் வெற்றி பெற்றோம்.. ஆளுங்கட்சியாக இருப்பதால், நுாற்றுக்கு நுாறு சதவீதம் வெற்றி உறுதி" என்றார்.

அதிமுக
திமுக பொய்யான வாக்குறுதிகளை தந்துவிட்டது என்றும், மக்களை ஏமாற்றிவிட்டது, வாக்குறுதிகள் எதையும் இன்னும் நிறைவேற்றவேயில்லை என்றும் அதிமுக தரப்பு தன்னுடைய குற்றச்சாட்டை தினமும் வீசிவரும் நிலையில், முதல்வர் தன்னுடைய அரசின் சாதனைகளை லிஸ்ட் போட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. அத்துடன் மாதம் 2 முறை அமைச்சர்கள் தந்த வாக்குறுதிகளை துறை வாரியாக ஆய்வு செய்வதாக உறுதியளித்துள்ளது, அதிமுகவுக்கு மேலும் ஜெர்க் தந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல்
வரப்போகும் உள்ளாட்சி தேர்தலில், திமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி ஓட்டுக்களை பெறுவதற்காக அதிமுக பிளான் போட்டு வந்த நிலையில், நடந்து முடிந்த பேரவையில் அமைச்சர்கள் தந்த வாக்குறுதிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதால், அடுத்த பிளானில் அதிமுக இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications