மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 3டி வீடியோ.. இதுக்கே 10 ஆண்டுகளா! முதல்வர் ஸ்டாலின் கேள்வி
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாதிரி வீடியோ என்ற பெயரில் கற்பனை காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என்று நினைத்துவிட்டார்களா என்ற கேள்வி எழுப்பியுள்ள ஸ்டாலின், இதற்கே 10 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன என்றும் கிண்டல் செய்துள்ளார்.
2019ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த சம்பவத்திற்கு பின் 2 முறை நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த போதும், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் முடியவில்லை. இதனை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், எய்ம்ஸ் செங்கல் இதுதான் என்று 2 தேர்தல்களில் பிரச்சாரம் செய்துவிட்டனர்.

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மிகப்பெரிய தாமதம் ஏற்பட்டது. இதன்பின் ஜப்பான் நிறுவனத்தில் இருந்து கடன் பெற்று மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் படிக்க தேர்வான மாணவர்கள், ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் கேள்வி
இதனிடையே மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு கட்டப்பட்டும் வரும் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலையை பார்த்தாரா என்று கேள்வி எழுப்பினார். இதனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மீண்டும் பேசுபொருளாகியது.
எய்ம்ஸ் மாதிரி வீடியோ
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் 4 நிமிடங்கள் கொண்ட மாதிரி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த மாதிரி வீடியோவில் கல்வி வளாகம், வெளி நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள், மாணவர்களுக்கு விடுதிகள், அத்தியாவசிய மருத்துவ சேவை கட்டிடங்கள், மாணவர்விடுதி, குடியிருப்புகள், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் அமைக்கப்படுகின்றன.
எப்போது பணிகள் முடியும்?
அதுமட்டுமல்லாமல் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான தளம், பிரம்மாண்ட கார் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஜனவரி மாதம் முதற்கட்ட பணிகள் முடிவடையும் என்றும், 2027 பிப்ரவரியில் 2ஆம் கட்ட பணிகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் பதிலடி
இந்த வீடியோவை பகிர்ந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரைக்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன். அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள். 2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா? இதற்கே 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன! என்று விமர்சித்துள்ளார்.
மதுரைக்கு வந்த மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள் #AIIMS என்ன ஆனது எனச் சென்று பார்த்தாரா? எனக் கேட்டிருந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) June 17, 2025
அதற்குப் பதிலாக, இந்தக் கற்பனைக் காட்சிகளை உருவாக்கி அளித்துள்ளார்கள்.
2026 தேர்தலுக்கு இந்த ஒரு வீடியோ போதும் என நினைத்துவிட்டார்களா?
இதற்கே 10 ஆண்டுகள்… https://t.co/EkZPaMq8Gu












Click it and Unblock the Notifications