அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
நண்பர் ரஜினிகாந்த் நலம்பெற முதல்வர் ஸ்டாலின் ட்வீட் பதிவிட்டுள்ளார்
சென்னை: "உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன்" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்..
ரஜினி நலமாக இருப்பதாகவும், கூடிய விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவருடைய குடும்பத்தினர், பத்திரிகையாளர்களிடம் நேற்றைய இரவே தெரிவித்தனர்..

மருத்துவமனை
அதேபோல, மருத்துவமனை நிர்வாகமும் ரஜினி உடல்நலம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.. அதில், ''தலைசுற்றல் காரணமாக ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறந்த மருத்துவர் குழு அவரது உடல் நலனை முழுமையாக ஆராய்ந்து, ரத்தத்தில் அடைப்பை நீக்கும் சிகிச்சையை (carotid artery revascularization) பரிந்துரைத்துள்ளது.

வீடு திரும்புவார்
இன்று (29 அக்டோபர் 2021) அந்த சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ரஜினிகாந்த் நன்றாகத் தேறி வருகிறார். இன்னும் சில நாட்களில் மருத்துவமனையிலிருந்து அவர் வீட்டிற்குத் திரும்புவார்'' என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது... மேலும் அவ்வப்போது ரஜினி உடல்நலம் குறித்த தகவல்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ட்வீட்
இதனிடையே, தமிழக சுகாதார துறை அமைச்சர் மா சுப்பிரமணியமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் எங்களிடம் தெரிவித்தது என்று கூறியிருந்தார்.. மேலும், அவருக்கு ரத்த ஓட்டத்தை அமைப்பதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் இன்னும் ஒரு சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.
Recommended Video

பிரபலங்கள்
நேற்றிரவு முதல் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ரஜினி நலம்பெற வேண்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினும், ரஜினிகாந்த் உடல் நலம் பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்து, ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் அவர், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அருமை நண்பர் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications