I3 Processor, 8GB RAM, AI மென்பொருளுடன் கூடிய இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்
சென்னை: "உலகம் உங்கள் கையில்" எனப்படும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை நாளை முதல்வர் ஸ்டாலின் சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச புத்தகம், புத்தகப் பை, சீருடை, சைக்கிள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அது போல் அரசு கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டமும் அமலில் உள்ளது.

இந்த இலவச லேப்டாப் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அதிலும் project, assignment உள்ளிட்டவைகளை செய்ய லேப்டாப் அவசியம் என்பதால் இதற்காக குறைந்தபட்சம் 30 ஆயிரத்தை கூட செலவு செய்ய முடியாத பொருளாதார நெருக்கடியில் அரசு கல்லூரி மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
பொருளாதாரத்தால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட கூடாது என்பதால் அரசு, இலவச லேப்டாப்பை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த முறை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி சுயநிதி கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெறுவார்கள். தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.
எல்லாருக்கும் லேப்டாப் கிடைக்குமா என்றால், அப்படி கிடையாது. இந்த லேப்டாப் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் அரசின் Post Matric Scholarship பெறும் தகுதி படைத்தவர்களாக இருத்தல் வேண்டும். அதாவது கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்குத்தான் இந்த இலவச லேப்டாப் வழங்கப்படும்.
தனியார் கல்லூரிகளில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவும், அவர்கள் நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளவும் இந்தத் திட்டம் கைகொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி, டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக இந்த மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், வேளாண், மருத்துவம் ஆகிய துறைகளில் உள்ள மாணவர்களுக்கு இந்த லேப்டாப் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இரு கட்டங்களாக 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் முதல் 10 லட்சம் லேப்டாப் நாளை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வழங்கப்படுகிறது.
டெல், ஏசர், எச்பி உள்ளிட்ட உயர்தர நிறுவனங்களின் லேப்டாப் செயற்கை நுண்ணறிவு மென்பொருளுடன் வழங்கப்படுகின்றன. இந்த லேப்டாப்கள் ஐ3 பிராசசர் , 8 ஜிபி ரோம், 256 ஜிபி மெமரி, பாஸ் லினக்ஸ் ஓஎஸ் உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்டது.
"அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்கு புதிய சாளரம்" என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உள்ளது. மேலும் பெர்பிளக்ஸிடி ப்ரோ 6 மாதம் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
தமிழகத்தில் மாபெரும் டிஜிட்டல் கனவை நனவாக்கும் வரலாற்று பெருமைகள் சேர்க்கும் கல்வி புரட்சித் திட்டமாக இது அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் வழங்கும் திட்டம் அரசு கல்லூரிகளுக்கு மட்டும் இல்லாமல் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications