இன்ப அதிர்ச்சி.. வைரமுத்து வீட்டுக்கே போயிட்டாரே ஸ்டாலின்.. 70வது பிறந்தநாளுக்கு நேரில் சர்ப்ரைஸ்
சென்னை: கவிஞர் வைரமுத்துவின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கே சென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
தமிழ் இலக்கியத் துறையிலும், தமிழ் சினிமாவிலும் தவிர்க்க முடியாத பெரும் ஆளுமையாக திகழ்ந்து வருபவர் வைரமுத்து. 43 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் பாடல்களை எழுதி முன்னணி பாடலாசிரியராக திகழ்ந்து வரும் வைரமுத்து இன்று தனது 70 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார். சென்னை பெசண்ட் நகரில் உள்ள வைரமுத்துவின் இல்லத்துக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
வீட்டுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வருவதை அறிந்த வைரமுத்து வீட்டு வாசலுக்கு சென்று மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். முதலமைச்சர் ஸ்டாலினுடன் திமுக பொருளாளர் டிஆர் பாலு, திமுக முதன்மை செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு ஆகியோரும் வைரமுத்து இல்லத்துக்கு சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
கவிப்பேரரசு @Vairamuthu அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) July 13, 2023
தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே!
உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!#HBDVairamuthu pic.twitter.com/21VQvorjky
வைரமுத்துவுக்கு தான் பொன்னாடை போர்த்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்து, "கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்க்கவிக்கு இது எழுபதாவது பிறந்தநாள். இன்னும் பல படைப்புகளைத் தருக கவிஞரே!உமது திரைமொழியும் கவிமொழியும் தமிழ்மொழியை இன்னும் பல்லாண்டு வளர்க்கட்டும்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications