வீடியோ காலில் வந்த முதல்வர் ஸ்டாலின்.. அசெம்பிள் ஆன திமுக நிர்வாகிகள்.. வந்தது முக்கிய உத்தரவு!
சென்னை: திமுக தேர்தல் ஒழுங்கிணைப்புக் குழுவினருடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் திமுக உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தல் முடிந்ததுமே, தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.

ஒருங்கிணைப்புக் குழு: 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் 5 பேர் கொண்ட திமுக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் செய்ய வேண்டிய மாறுதல்கள், கட்சி ரீதியாக செய்ய வேண்டிய சீரமைப்புகள் தொடர்பாக பல்வேறு அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் ஸ்டாலின்: முதல்வர் ஸ்டாலின், 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்ற நிலையிலும், கட்சியையும், ஆட்சியையும் கவனித்து வருகிறார். இங்கு உதயநிதி ஸ்டாலின், மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு, தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை என ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன், அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு ஆலோசனை நடத்தி உள்ளார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

வீடியோ கால் மூலமாக ஆலோசனை: காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த இந்தக் கூட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழுவின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து உள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். ஸ்டாலின் அமெரிக்காவில் இருப்பதால் இந்திய நேரப்படி இன்று இரவில் இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
திமுக ஒருங்கிணைப்பு குழுவினர் இதுவரை பல கட்டங்களாக நடத்திய ஆலோசனைகளில் கட்சி நிர்வாகிகளிடம் பெறப்பட்ட கருத்துகள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் எடுத்துரைத்து உள்ளதாக தெரிகிறது.
என்ன பேசினார்?: திமுகவின் முப்பெரும் விழா ஏற்பாடுகள், பவளவிழா ஏற்பாடுகள், மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை முதலமைச்சர் கேட்டறிந்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், திமுக பவளவிழாவையொட்டி கழகத்தினரின் வீடுகள்- அலுவலகங்கள்- வணிக வளாகங்களில் திமுக கொடிகளைப் பறக்கவிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
ஸ்டாலின் மகிழ்ச்சி: அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்தும் ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் தகவல்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அமெரிக்க வாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சிகாகோவில் நேற்று நடைபெற்ற தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாகவும் முதலமைச்சர் ஸ்டாலின், கூறியுள்ளார்.
திமுகவில் மாற்றங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியில் அமைப்பு நீதியாக சீரமைப்பை மேற்கொள்வது பற்றியும் ஆலோசித்து, முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 4 நாட்களில் முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு திரும்ப உள்ள நிலையில், அதற்கு முன்பாக அமெரிக்காவில் இருந்தபடியே, கட்சி சார்பான சில முடிவுகளை எடுக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறைப் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு தமிழக அரசுக்கும் பல்வேறு நிறுவனங்களுடன் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருவது குறிப்பிடத்தக்கது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா












Click it and Unblock the Notifications