முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப் பயணம்? ஏற்பாடுகள் தீவிரம்? என்ன விசயம் தெரியுமா?
சென்னை: முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப் பயணம் செல்ல இருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.
ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ளது. அதனை அடுத்து உளவுத்துறை ரிப்போர்ட் ஒன்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் தரப்பட்டுள்ளது என்று தகவல் வெளியானது.

அந்த அறிக்கையில் எந்தத் தொகுதியில் அடி கிடைக்கும்? எங்கே வெடி போட்டுக் கொண்டாடும் அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்ற சமாச்சாரங்கள் எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
ஒருவேளை எங்காவது சறுக்கல் ஏற்பட்டால், ஸ்டாலின் சாட்டை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் உபிகள் தரப்பில் தகவல் பரவி வருகிறது.
ஸ்டாலின், தேர்தலுக்கு முன்பே எந்தத் தொகுதியில் கட்சியின் வேட்பாளர் தோல்வி அடைகிறார்களே அந்த மாவட்டச் செயலாளர்கள் உட்படப் பொறுப்பு அமைச்சர்களுக்கும் ஆப்பு காத்திருக்கிறது என்பதை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே தெளிவுபடுத்தியிருந்தார்.
இந்த லோக்சபா தேர்தலில் சில அமைச்சர்கள் தங்களின் ஆதரவாளர்களுக்குச் சீட்டு ஒதுக்கும்படி கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், அதற்கு மாறாக வேறு சிலருக்குச் சீட்டு ஒதுக்கியதால், அமைச்சர்கள் சிலர் புகைச்சலிலிருந்ததாகப் பேச்சு அடிப்பட்டது.
இதனால், தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பாதியைத்தான் தேர்தலுக்காகச் செலவு செய்துள்ளனர் என்றும் ஒருபக்கம் நியூஸ் பரவிவருகிறது.
ஆக, எப்படிப் பார்த்தாலும் வரும் ஜூன் 4 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ரிசல்ட்டுக்குப் பின்னர் அமைச்சரவை மாற்றம் கன்ஃபார்ம் என்கிறார்கள்.

அப்படி அமைச்சரவை மாற்றம் நடைபெற்றால் இந்த முறை கொங்கு மண்டலத்திற்கு அதிக வாய்ப்பை தருவார் ஸ்டாலின் என்று சொல்கிறார்கள்.
அதற்குக் காரணம், அந்த பெல்ட்டில் திமுக கால்பதிக்க வேண்டும் எனத் தலைமை விரும்புகிறதாம். கூடவே உதயநிதிக்குத் துணை முதல்வர் பொறுப்பு கட்டாயம் வழங்கப்படும் என்ற பேச்சும் பரவலாகக் கட்சிக்கு எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில்தான் கோட்டை வட்டாரத்திலிருந்து முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கப் பயணத்திற்குத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதுதான் திமுக பற்றிய அப்டேட் நியூஸ் ஆக வலம் வருகிறது.
எதற்காக இந்த அமெரிக்கப் பயணம்?
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடன் மு.க.ஸ்டாலின் கடந்த 2022 மார்ச் மாதம் துபாய் எக்ஸ்போ நிகழ்வில் கலந்து கொள்வதற்காகத் துபாய் சென்றிருந்தார்.
அங்கே உள்ள 6 முக்கிய தொழில் நிறுவனங்களுடன் சுமார் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெப்பம் இட்டார். இதன் மூலம் மட்டும் 14,700 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அடுத்ததாகக் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைச் சென்னையில் நடத்தியது. இது மிகப்பெரிய முன்னெடுப்பாகப் பல வர்த்தக நிறுவனங்களால் கூறப்பட்டது. அதற்காக உலக முழுக்க இருந்து பல தொழிலதிபர்கள் சென்னையை முகாமிட்டனர்.

இதன் மூலம் ஸ்டாலின்,, மிகப்பெரிய அளவுக்கு முதலீட்டாளர்களை ஈர்த்தார். இந்த மாநாடு மூலம் கிட்டத்தட்ட 6.64 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளைக் கொண்டு வந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து அவர் அதே ஜனவரி மாதம் 27 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டுக்குப் பயணம் செய்தார். சுமார் 12 நாள்கள் வெளிநாட்டிலிருந்தார். இந்தப் பயணம் மூலம் தமிழ்நாட்டுக்கு ரூ.3440 கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி சென்னை திரும்பிய ஸ்டாலின் தெரிவித்தார்.
ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களான 'ஹபக் லாய்டு' 2500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும் அதேபோல் எடிபன் நிறுவனம் 540 கோடி ரூபாயும் ரோக்கா நிறுவனம் 400 கோடி ரூபாயையும் முதலீடு உறுதி அளித்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் தான் இப்போது புதியதாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார் ஸ்டாலின். வரும் ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்று கோட்டை வட்டாரத்தில் உள்ளவர்கள் தகவல் தருகிறார்கள்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. முறைப்படி விசா எடுப்பது, டிக்கெட் முன்பதிவு செய்வது மேலும் யார்? யார் இந்தப் பயணத்தில் உடன் இருக்க வேண்டும் என்பது பற்றி பட்டியல் தயாரிப்பது என பூர்வாங்க பணிகள் வேகம் எடுத்துள்ளன எனத் தகவல் சொல்கிறார்கள் சில அதிகாரிகள்.
ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
-
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அம்போ! ஊதிய உயர்வும் அம்போ! தேர்தல் நேரத்தில் பறந்த கண்டனம்! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications