குடும்ப பிரச்சனை.. மனஸ்தாபம்.. திமுகவில் இணைந்தார் முதல்வர் பழனிசாமியின் பெரியம்மா மகன்!
தமிழக முதல்வர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமியின் பெரியம்மா மகன் விஸ்வநாதன் திமுகவில் இணைந்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமியின் பெரியம்மா மகன் விஸ்வநாதன் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுகவில் ஒரு காலத்தில் வெறும் எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை மட்டும் வகித்து வந்தவர் முதல்வர் பழனிசாமி. அதன்பின் அவருக்கு கட்சியில் முதல்வர் பதவி கிடைத்து, தற்போது ஆட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்.
அதேபோல் இன்னொரு பக்கம் கட்சியையும் அவர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் பழனிசாமி உள்ளார்.

வெற்றி தோல்வி
அதிமுக கட்சி லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தாலும், சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதேபோல் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியிலும் அதிமுக வென்றது. இதனால் அதிமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது.

என்ன மோசம்
இந்த நிலையில் முதல்வர் பழனிசாமிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அவரின் பெரியம்மா மகன் விஸ்வநாதன் திமுகவில் இணைந்தார். இன்று காலை அவர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் சேலத்தில் திமுகவில் இணைந்தார். ஸ்டாலின் தலைமையின் கீழ் பணியாற்றுவேன் என்று விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம் எப்படி
கட்சியில் தனக்கு பெரிய அளவில் மரியாதை இல்லை. முதல்வரின் சகோதரனாக இருந்தும் கூட என்னை யாரும் மதிக்கவில்லை என்று விஸ்வநாதன் புகார் வைத்து வந்தார். அவர்களின் குடும்பத்திலும் இதனால் நிறைய பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இதனால் விஸ்வநாதன் தற்போது கட்சி மாறியுள்ளார்.

என்ன அதிர்ச்சி
முதல்வர் பழனிசாமியை இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விஸ்வநாதன் திமுகவிற்கு செல்வார் என்று அவர் நினைக்கவில்லை. விஸ்வநாதன் பார்க்க அசப்பில் கொஞ்சம் முதல்வர் பழனிசாமி போலவே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
தவெகவில் இணைந்த 5 மாஜி அமைச்சர்கள், 7 Ex MLAs! இதுவரை அதிமுகவில் இருந்து விலகியவர்கள் யார் யார்? -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்?












Click it and Unblock the Notifications