"Over" திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு முடிந்த பின்.. வெளியில் வந்து ஸ்டாலின் கொடுத்த சிக்னல்!
சென்னை: காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பின் அண்ணா அறிவாலய காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியில் வந்த முதல்வர் ஸ்டாலின், சிரித்துக் கொண்டே Over என்று செய்தியாளர்களை பார்த்து சிக்னல் காட்டிய வீடியோ திமுகவினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருந்தார். இதன்பின் திமுக கொடுத்த ஆஃபருக்கு காங்கிரஸ் கட்சி இறங்கி வந்துள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வந்தார்.

இதன்பின் சிறிது நேரம் தனியார் விடுதியில் தங்கிருந்த நிலையில், 8 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை, ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் வந்தனர். அதேபோல் முதல்வர் ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, அமைச்சர் எவ வேலு, டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் அண்ணா அறிவாலயம் வந்தனர்.
இதன்பின் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த தேர்தலை விடவும் கூடுதலாக 3 தொகுதிகளை திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி இருக்கிறது. இதனால் இரு தரப்பும் மன நிறைவுடன் அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியில் வந்துள்ளனர்.
காங்கிரஸ் நிர்வாகிகள் புறப்பட்ட பின் முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இருந்து வெளியில் வந்தார். அப்போது செய்தியாளர்கள் எதிரில் இருந்தவர். அவர்களை பார்த்து "Over" என்று சிரித்துக் கொண்டே உற்சாகமாக சிக்னல் கொடுத்தார். இந்த வீடியோ திமுகவினர் மத்தியில் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
2019 லோக் சபா தேர்தலில் இருந்து திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அப்படியே தொடர்ந்து வருகின்றன. ஒவ்வொரு தேர்தலின் போது கூடுதலாக சில கட்சிகள் இணைந்தும் வருகின்றன. 8 ஆண்டுகளாக ஒரு கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்து முதல்வர் ஸ்டாலின் தேர்தலை சந்தித்து வருவது பல்வேறு தரப்பினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications