ஒரே கல்லில் 3 மாங்காய்.. ஸ்டாலின் எடுத்த முக்கோண திட்டம்.. 2 வாரத்திற்கு பின் எல்லாமே அடியோடு மாறும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தலுக்கு பின் தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் பின்வரும் 3 மாற்றங்களை மேற்கொள்வார் என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாங்காய் 1: அமைச்சரவை மாற்றம் இருக்கும். 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அமைச்சரவை மாற்றம் இருக்கும். உதயநிதி ஸ்டாலின் கண்டிப்பாக துணை முதல்வர் ஆவார். புதிய அமைச்சர்கள் ஆட்சியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. இளம் அமைச்சர்கள் பெரும்பாலும் ஆட்சி அதிகாரத்தில் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

CM Stalin and DMK will make these 3 changes in party and governance

கூடுதலாக ஒரு சிறுபான்மையினர் அமைச்சர் சேர்க்கப்பட்டு ஒரு அமைச்சர் நீக்கப்படுவார். பெரிய அளவில் மாவட்ட செயலாளர்கள் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெற்கில் உள்ள குறிப்பிட்ட சாதியை சேர்ந்த ஒருவர் அமைச்சராக உள்ளார். திமுக அமைச்சரவை மாற்றப்படலாம். அமைச்சர் பிடிஆருக்கு உயரிய பொறுப்பு ஒன்று அளிக்கப்படலாம். அதாவது அமைச்சரவையிலேயே உயரிய இலாக்கா வரும் வாய்ப்புகள் உள்ளன. அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு ப்ரோமோஷன் கண்டிப்பாக கிடைக்கும். அமைச்சர் உதயநிதியிடம் உள்ள விளையாட்டு துறை மாற்றப்படலாம் என்கிறார்கள்.

மாங்காய் 2: தமிழ்நாட்டில் புதுச்சேரியில் என்று 40 இடங்களிலும் திமுக வெல்லும் என்று ஸ்டாலினுக்கு உறுதியான ரிப்போர்ட் சென்றுள்ளதாம். மத்திய அரசில் பாஜக வெல்ல வாய்ப்பு குறைவு. மெஜாரிட்டி கிடைக்காது. யாருக்கும் மெஜாரிட்டி வராது. அப்படி இருந்தால் இந்தியா கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றும் ரிப்போர்ட் சென்றுள்ளதாம். இதை இரண்டையும் கேட்டு ஸ்டாலின் உற்சாகம் ஆகி உள்ளாராம். மாவட்ட அளவில் நிர்வாகிகள், அமைச்சர்களிடம் ஸ்டாலின் பேசி இருக்கிறார். திமுகவின் உள்ளூர் நிலவரம் தொடங்கி தேர்தல் பணிகள் நடத்தப்பட்ட விதத்தை பாராட்டியும், தகவல்களை கேட்டும் பேசி இருக்கிறார் .

இது போக தேசிய அளவில் இந்திய கூட்டணி வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் இருந்து 3-4 அமைச்சர்கள் வர வேண்டும். பெரிய துறைகளை நாம் எடுக்க வேண்டும். யாரை அமைச்சர் ஆக்கலாம். யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் ஸ்டாலின் ஆலோசனைகளை செய்து இருக்கிறாராம்.

மாங்காய் 3: தமிழ்நாட்டை சேர்ந்த மிக உயரிய ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் லோக்சபா தேர்தலுக்கு பின் கண்டிப்பாக மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக ஆளும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உயரிய பொறுப்பில் உள்ளவர் ஆட்சி அதிகாரத்தில் முக்கிய புள்ளியாக இருக்கிறார்.

ஆட்சியில் அதிக வாய்ஸ் உள்ளவராக இருக்கிறார். இவரின் பேச்சை டாப்பில் இருக்கும் பலர் அப்படியே கேட்கும் நிலை உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில்தான் அவரை தூக்கி அடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு டம்மி போஸ்டிங் கொடுத்து ஓரம்கட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடைசி மாற்றம்: கடைசியாக கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். மொத்தம் 12 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. குறிப்பாகத் திருப்பத்தூர் திருவண்ணாமலை சேலம், தென்காசி செங்கல்பட்டு, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டார். சேலம் மாவட்ட ஆட்சியராக ஆர். பிருந்தா தேவி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ் நியமனம் செய்யப்பட்டார். அதேபோல செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ், தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+