46 வயதில் உதயநிதி.. அப்பா அம்மாவிடம் பிறந்தநாள் வாழ்த்து! புத்தகத்தில் பக்கா அரசியல் ஸ்டேட்மெண்ட்
சென்னை: தமிழ்நாடு அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தன்னுடைய 46 வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தனது தந்தையும் முதலமைச்சருமான முக ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தயாரிப்பாளர், நடிகர் என திரைத்துறையின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி, திமுக இளைஞரணி செயலாளர், விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக அரசியலில் பயணித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 1977 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி பிறந்த இவர் இன்று தன்னுடைய 46 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். உதயநிதி ஸ்டாலினுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு தனது தந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தாய் துர்கா ஸ்டாலினை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிறந்தநாள் கொண்டாடும் உதயநிதி ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தார். இதுகுறித்து புகைப்படங்களுடன் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார்.
அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "எனது பிறந்த நாளை முன்னிட்டு, ஈன்றெடுத்த பெற்றோர் கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடமும் - அன்னையார் அவர்களிடமும் இன்று காலை வாழ்த்துகளைப் பெற்றேன். அயராது உழைக்கவும் - அன்பின் வழி நடக்கவும் எந்நாளும் வழிநடத்தும் தாய் - தந்தையரின் வாழ்த்தை பெற்ற மகிழ்வான தருணத்திலிருந்து இந்த நாளை தொடங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இந்த பதிவில் உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்து இருக்கும் புகைப்படத்தை உற்று நோக்குகையில், எழுத்தாளர் சிகரம் ச.செந்தில்நாதன் எழுதிய "குடியரசுத் தலைவர் ஆளுநர் அதிகாரங்கள்" என்ற புத்தகத்தை முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உதயநிதி வழங்கி இருப்பது தெரிகிறது. தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தெரிவிக்காத ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு நடத்தி வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வழங்கி இருக்கக்கூடிய அதிகாரங்கள் என்ன என்பதை விவரிக்கும் புத்தகத்தை முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு உதயநிதி வழங்கி இருப்பது அரசியல் ஸ்டேட்மெண்டாக பார்க்கப்படுகிறது.
-
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications