Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

H Raja: எச் ராஜாவிடம் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.. கட்சி பாகுபாட்டை கடந்து நெகிழ்ச்சி.. அட்மின் போட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மூத்த தலைவர் எச் ராஜா (H Raja) சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி டிஆர் பாலு ஆகியோர் எச் ராஜாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இன்று மாலையில் முதல்வர் ஸ்டாலினை, எச் ராஜா விமர்சனம் செய்திருந்த நிலையில் கட்சி பாகுபாட்டை கடந்து நடந்த இந்த நலம் விசாரிப்பு நடந்தது. இதுதொடர்பாக எச் ராஜாவின் அட்மின் எக்ஸ் வலைதள பக்கத்தில் போட்டோவுடன் போட்ட பதிவு கவனம் பெற்றுள்ளது.

தமிழக பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் எச் ராஜா. கடந்த ஜனவரி 30ம் தேதி எச் ராஜாவிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதாவது தமிழக சட்டசபை தேர்தலையொட்டி சென்னை கிண்டியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

cm-stalin-and-tr-balu-met-hr-raja-who-admitted-to-apollo-hospital-chennai

இந்த நிகழ்ச்சியில் பாஜக சார்பில் எச் ராஜா பங்கேற்றார். அப்போது அவருக்கு திடீரென்று உடல்நல குறைபாடு ஏற்பட்டது. எச் ராஜா மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த கட்சி பிரமுகர்கள், விழாவில் பங்கேற்றவர்கள் எச் ராஜாவை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போலோவில் சிகிச்சை

எச் ராஜாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எச் ராஜாவிற்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. தற்போதும் எச் ராஜா மருத்துவ சிகிச்சையில் தான் உள்ளார்.

நேரில் சென்ற ஸ்டாலின்

அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ராஜாவை சந்தித்து அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின், சிகிச்சை பெற்று வரும் எச் ராஜாவை இன்று முதல்வர் ஸ்டாலின், திமுக எம்பி டிஆர் பாலு ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

எக்ஸில் போட்டோ வெளியீடு

இதுதொடர்பாக எச் ராஜாவின் எக்ஸ் வலைதள பக்கத்தில் போட்டோவுடன் இரவு 9.06 மணிக்கு முக்கிய பதிவு வெளியிடப்பட்டுள்ளது. முதல்வரின் கையை எச் ராஜா பிடித்து பேசிவதும், ஸ்டாலின் அருகே டிஆர் பாலு எம்பி நிற்கும் போட்டோவும் வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பதிவில்

‛‛தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு எம்பி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச் ராஜாவை இன்று இரவு 7.50 மணிக்கு நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

எச்.ராஜா விரைவில் பூரண குணமடைந்து நலமோடு மக்கள் பணியாற்ற தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவிற்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் - எச்.ராஜா குடும்பத்தினர்'' என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விமர்சனத்துக்கு நடுவே சந்திப்பு

ஏனென்றால் தமிழக அரசியலில் முதல்வர் ஸ்டாலினும், எச் ராஜாவும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. எச் ராஜா பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர். இன்று கூட மாலை 4.44 மணிக்கு ரூ.5 ஆயிரம் உரிமைத்தொகை வழங்கியதை எச் ராஜா தனது எக்ஸ் பதிவின் வழியாக விமர்சனம் செய்திருந்தார்.

அந்த பதிவில், ‛‛ சொன்னதைச் செய்யாமல் வெற்று பெருமை மட்டும் பேசும் முதல்வர் ஸ்டாலின்! ஆட்சி அரியணையில் அமர்ந்ததும் உடனடியாக அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சி அமைத்த 2021 இல் இருந்து 2023 வரையிலான ரூ.30,000 மகளிர் தொகையை வழங்காமல் ஏமாற்றியதை மறைக்க, தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் ரூ.5,000 வழங்கி பெருமை பேசுவதற்கு வெட்கமாக இல்லையா?

அதேபோல, 2021 தேர்தல் வாக்குறுதியில் அரசுத் துறைகளில் 5.50 லட்சம் காலிப்பணியிடங்கள் இளைஞர்களை கொண்டு நிரப்பப்படும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இதில் பாதியைக் கூட முறையாக நிறைவேற்றாமல், 2026-இல் வெறும் 10,000 பணியிடங்களை நிரப்பியதை பெரும் சாதனையைப் போல பிரம்மாண்ட விழாவாக திமுக அரசு கொண்டாடுவது முறையா?

நெகிழ வைத்த ஸ்டாலின்

ஐந்தாண்டுகள் முடிந்து திமுகவின் அவல ஆட்சியே முடிவு பெறப் போகிறது! ஆனால், வெற்றுப் பெருமை பேசும் திமுக அரசின் கீழ்த்தரமான பழக்கம் மட்டும் முடிந்தபாடில்லை! எல்லாம் இன்னும் சில நாட்களுக்கு தான்!

அணையப் போகும் ஜோதி கொளுந்துவிட்டு எரிவதைப் போல, விளம்பரங்களிலும் வெற்று பெருமை பேசுவதிலும் மும்முரமாக இருக்கும் திமுக அரசு அஸ்தமனமாகும் தினம் தொலைவில் இல்லை!'' என்று விமர்சனம் செய்திருந்தார். ஆனால் இன்று இரவே முதல்வர் ஸ்டாலின் எச் ராஜாவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அதோடு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடந்த 1ம் தேதி மருத்துவமனை சென்று எச் ராஜாவின் உடல்நலம், அளிக்கப்படும் சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தார். ஆனால் அப்போது எச் ராஜாவை அவரால் பார்க்க முடியவில்லை. இதையடுத்து இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் எச் ராஜாவை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+