ஆட்டம் ஆரம்பம்.. மகேந்திரனை தனியாக அழைத்த ஸ்டாலின்.. கூடவே சென்ற உதயநிதி.. செம அசைன்மென்ட்!
சென்னை: திமுகவில் இணைந்த டாக்டர் மகேந்திரன் உடன் நேற்று முதல்வர் ஸ்டாலின் தனியாக ஆலோசனை நடத்தியது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
நேற்று திமுகவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் தலைவர் டாக்டர் மகேந்திரன் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் நிர்வாகி பத்ம பிரியாவும் திமுகவில் நேற்று இணைத்தார். மகேந்திரனுடன் மேலும் 78 மநீம நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

என்ன
இந்த நிகழ்விற்கு வரும் போதே, மகேந்திரனுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டு இருந்தது. 78 மநீம நிர்வாகிகள் மட்டுமின்றி அடிமட்ட தொண்டர்கள் பலரையும் திமுகவில் இணைக்கும் முடிவில் மகேந்திரன் இருக்கிறார். மொத்தம் 11 ஆயிரம் பேர் கொண்ட பட்டியலை இதற்காக திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் மகேந்திரன் நேற்று கொடுத்தார்.

மீட்டிங்
இந்த நிலையில் நேற்று இந்த நிகழ்வு முடிந்த பின் நிர்வாகிகள் பல, பல இடங்களில் சிறிய சிறிய கூட்டம் போட்டு அண்ணா அறிவாலயத்தில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது மகேந்திரனை அழைத்து முதல்வர் ஸ்டாலின் தனியாக பேசினார். மகேந்திரன் ஸ்டாலினை சந்திக்க சென்ற போது, உதயநிதி ஸ்டாலினும் உடன் சென்றார். இவர்கள் மூன்று பேரும் 15 நிமிடங்கள் தனியாக பேசினார்கள்.

பேசியது என்ன
திமுக கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த முயன்று வருகிறது. இதற்காகத்தான் மகேந்திரனை திமுக உள்ளே இழுத்து போட்டது என்பது பலரும் அறிந்த செய்திதான். இது போக நேற்று நடந்த மீட்டிங்கில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் சில முக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்களை திமுக பக்கம் இழுக்கும் பணி மகேந்திரனுக்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அமைச்சர்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்களை திமுக பக்கம் கொண்டு வாருங்கள் என்று இந்த மீட்டிங்கில் மகேந்திரனிடம் ஸ்டாலின் குறிப்பிட்டதாக தெரிகிறது. இதில் உதயநிதி மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் தேவையான உதவிகளை உங்களுக்கு வழங்குவார்கள், நீங்கள் சுதந்திரமாக செயல்படலாம் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதாக தெரிகிறது.

ஏன் இந்த அசைன்மென்ட்
கொங்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் ஏற்கனவே திமுக பக்கம் தாவ ரெடியாகிவிட்டார். இதுபோக மகேந்திரனுக்கு கொங்கில் நிறைய அதிமுக சொந்தங்கள் நிர்வாகிகளாக இருக்கிறார்கள். தூரத்து உறவினர்கள் என்ற வகையில் சில நிர்வாகிகள் அதிமுகவில் இருக்கிறார்கள். தூரத்து அதிமுக உறவினர்கள் பலர் இப்போதும் மகேந்திரன் உடன் டச்சில் உள்ளனர். மகேந்திரன் நினைத்தால் இவர்களை எளிதாக திமுக பக்கம் கொண்டு வர முடியும்.

உள்ளாட்சி
உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலுக்கு முன் இவர்களை திமுக பக்கம் கொண்டு வந்து, தேர்தலுக்கு முறையாக தயாராகும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக தெரிகிறது. உள்ளூர் அளவில் வென்றால், அடிப்படை கட்டமைப்பு வளரும், வரும் காலத்தில் கொங்கில் திமுக கொடி பறக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்புகிறார்.

பொறுப்பு
கோவையில் திமுகவின் அடிப்படை கட்டமைப்பையே இது மாற்றும். அதோடு இதில் மகேந்திரன் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அவருக்கு கொங்கில் அல்லது கோவையில் மட்டும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகவே நேற்று இவர்கள் ஆலோசனை செய்தனர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications