Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2023-ம் ஆண்டு தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு! சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 -ம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்த அவர் இந்த புதிய தகவலையும் வெளியிட்டார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

 வெளிநாட்டு நேரடி முதலீடு

வெளிநாட்டு நேரடி முதலீடு

''தமிழக அரசு தொழில் துறையில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் முதலீட்டாளர்களுக்கு, புதிய தொழில் தொடங்குவோருக்கு மிகப்பெரிய நம்பிக்கையை இந்த அரசின்மீது, தமிழ்நாட்டின் மீது அளித்திருக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு கூறவேண்டுமென்று சொன்னால், கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் மட்டும் தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு (Foreign Direct Investment) என்பது 41.5 விழுக்காடு அதிகரித்துள்ளது.''

புதிய தகவல்

புதிய தகவல்

''இந்நிலையில், அடுத்தகட்டமாக, 2022 ஆண்டு மே மாதத்தில் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள உலகப் பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டத்திலும், ஜெர்மனி நாட்டில் ஹானோவர் நிகழ்விலும், ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள "க்ளோபல் ஆஃப் ஷோர் வின்ட்" (Global Off Shore Wind) நிகழ்விலும், ஜூலை மாதத்தில் அமெரிக்க நாட்டிலும், முன்னணி முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.''

என்னென்ன நடவடிக்கைகள்

என்னென்ன நடவடிக்கைகள்

''10 மாதங்களிலேயே தொழில் துறையில் இந்த அரசு செய்திருக்கக்கூடிய சாதனைகளுக்கு நம்முடைய அரசு பொறுப்பேற்றதும் எடுத்த நடவடிக்கைகளே காரணம். 20.7.2021 அன்று தொழில்களை ஈர்க்க, 24 துறைகளைச் சார்ந்த 100 சேவைகளை மின்மய வடிவில் அளித்திடும் வகையில் "ஒற்றைச் சாளர இணையதளம்-2.0"-யைத் தொடங்கி வைத்தேன். 23.11.2021 அன்று "ஒற்றைச்சாளர கைபேசி செயலி"யையும் தொடங்கி வைத்தேன். 7.3.2022 அன்று தொழில் தொடங்கத் தேவைப்படும் நிலம் தொடர்பாக "தமிழ்நாடு நிலத் தகவல் இணையத்தை" தொடங்கி வைத்தேன்.''

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

''முக்கியமாக எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் சிறப்பாக நடத்தப்படும். அதன்மூலம் மேலும் அதிகமான முதலீடுகள் திரட்டப்படும். நம்முடைய பல இலட்சம் தமிழக இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+