Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி -முதல்வர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேபோல் சித்திரை திருவிழா கூட்ட நெரிசலில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், சாதாரண காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து இந்த நிதியை உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு போட்டுள்ளார்.

சித்திரை திருவிழா

சித்திரை திருவிழா

மதுரையில் இன்று (16-4-2022) காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கோவிட் பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இந்த வைபவம் நடப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

கூட்ட நெரிசல்

கூட்ட நெரிசல்

இந்நிலையில், இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று, திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துயர நிகழ்வு

துயர நிகழ்வு

இந்தத் துயர சம்பவத்தை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , மிகவும் வேதனையுற்று, உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்.

மாவட்ட ஆட்சியர்

மாவட்ட ஆட்சியர்

முதலமைச்சரின் இந்த உத்தரவை அடுத்து மாவட்ட ஆட்சியரும் அமைச்சர்கள் மூர்த்தியும், பழனிவேல் தியாகராஜனும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் இந்த நிவாரண நிதியை இன்று மாலைக்குள் நேரில் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+