கதண்டு தாக்கி உயிரிழந்த நபர்.. இரங்கல் தெரிவித்து ரூ. 2 லட்சம் நிதி உதவி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மயிலாடுதுறை மாவட்டத்தில்‌ விஷ வண்டுகள்‌ தாக்கி உயிரிழந்தவரின்‌ குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌, அவரது குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மயிலாடுதுறை மாவட்டம்‌, சீர்காழி வட்டம்‌, 80-ராதா நல்லூர்‌ கிராமம்‌, அய்யனார்‌ கோவில்‌ தெருவைச்‌ சேர்ந்த வீரமணி தபெ. செண்டாய்‌ என்பவர்‌ கடந்த 31-08-2023 அன்று திருக்கடையூர்‌ கிராமத்தில்‌ மாங்காய்‌ பறிக்கும்‌ வேலை செய்து கொண்டிருக்கும்‌ போது கதண்டு என்கிற விஷ வண்டுகள்‌ தாக்கி காயமடைந்து திருக்கடையூர்‌ ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ முதலுதவி செய்யப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்‌.

CM Stalin announced 2 lakh aid for the family of who died due to poisonous beetles bite

அங்கு சிகிச்சை பலனின்றி அவர்‌ இன்று (2-9-2023) காலை உயிரிழந்தார்‌ என்ற செய்தியினைக்‌ கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்‌. உயிரிழந்த வீரமணி அவர்களின்‌ மனைவி மற்றும்‌ இரண்டு குழந்தைகளுக்கும்‌, உறவினர்களுக்கும்‌ எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, ஆறுதலையும்‌ தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம்‌ ரூபாய்‌ நிதியுதவி வழங்கிட உத்திரவிட்டுள்ளேன்‌" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+